Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீ யார்னு எங்களுக்கு தெரியாதா?: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்

சென்னை: எல்.கே.ஜி. படத்தின் 5 மணி காட்சி தொடர்பாக விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. அந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. அதை தான் பலராலும் நம்பவே முடியவில்லை.
இது குறித்து அறிந்த நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
ரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா

விஷ்ணு விஷால்
5 மணி காட்சியின் மதிப்பு குறைகிறது. இது ஏமாற்று வித்தையாகி வருகிறது என்று படத்தின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்தார் விஷ்ணு விஷால்.

ஆர்.ஜே. பாலாஜி
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜியோ நானும் அதிகாலை காட்சி ஏமாற்று வித்தை என்றே நினைத்தேன். பின்னர் தியேட்டர் உரிமையாளரிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். எங்களுக்கு பரிந்துரை சீட் அல்ல மெரிட் சீட் கிடைத்துள்ளது என்று பதில் அளித்துள்ளார். #RespectOthersWorkYoullGetUrs

மதிப்பு
ஆர்.ஜே. பாலாஜிக்கு பதில் அளித்து விஷ்ணு விஷால் ட்வீட் செய்திருப்பதாவது, முதலில் உங்களை சுற்றியுள்ளவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். படங்களில் நடிப்பதற்கு முன்பு என்ன செய்தீர்கள், அப்பொழுது நடிகர்களை எந்த அளவுக்கு மதித்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் உழைப்புக்கு மட்டும் அல்லாமல் அடுத்தவர்களின் கடின உழைப்புக்கும் கிரெடிட் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி பெற மக்களின் சென்டிமென்ட்டை மீண்டும் மீண்டும் நான் பயன்படுத்தவில்லை என்பதில் மகிழ்ச்சி என்கிறார் விஷ்ணு. #rspctall

சினிமா
சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைப்பதில் மகிழ்ச்சி. இது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஆக்கர்பூர்வமான விமர்சனம் என்ற பெயரில் எப்பொழுது பார்த்தாலும் மக்களை தவறாக வழிநடத்தும் சிலரை பார்த்து தான் கவலையாக உள்ளது என்கிறார் விஷ்ணு விஷால்

தீயணைப்பு துறை
எங்கள் குழுவில் யாருடைய அப்பாவும் தீயணைப்பு துறையில் தலைவராக இல்லை. அதை வைத்து தியேட்டரை மிரட்டி காட்சியை வாங்கவில்லை என்று கூறி பாலாஜி வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த விஷ்ணு விஷால், ஆரம்பிச்சுட்டான்..சிம்பதி ஓட்டு...என் தந்தை கடந்த 2 ஆண்டுகளாக தீயணைப்பு துறையில் உள்ளார்...அவர் வெள்ளங்கள் மற்றும் வர்தாவின் போது தீயணைப்பு துறையில் இருந்தார். அவர்கள் பிறரின் உயிரை எப்படி காப்பாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..நீ என்ன உதவி செய்தாய் என்று எங்களுக்கு தெரியும்..உள்ளுக்குள் என்ன செய்தாய் என்றும் தெரியும்...மெரினா போராட்டங்களின்போது என்ன செய்தாய் என்பதும் தெரியும் என்கிறார். விஷ்ணு விஷால் பாலாஜியை விமர்சித்து போட்ட ட்வீட்டுகளை எல்லாம் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.