»   »  தமிழகத்தைத் தாக்கிய கனமழை... களத்தில் குதித்த நடிகர்கள்

தமிழகத்தைத் தாக்கிய கனமழை... களத்தில் குதித்த நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழையால் பாதிக்கபட்ட காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உணவுகள் வழங்கி உதவி புரிந்து வருகின்றனர்.

சென்னையில் மற்றும் தமிழகத்தில் பெய்த கனமழையால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். காய்கறி தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், சரத்குமார், விஷால், சந்தானம் ஆகியோர் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கனமழை

கனமழை

2 வாரங்களுக்கும் மேலாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பால், காய்கறி, மீன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை சகட்டுமேனிக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

நடிகர்கள்

நடிகர்கள்

நடிகர்களில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், விஷால், சந்தானம் ஆகியோர் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். ராகவா லாரன்ஸ் மழையால் பாதித்த மக்களுக்கு முதல் ஆளாக உணவு வழங்கி உதவி செய்தார். அவ்வப்போது தன்னால் இயன்ற உதவியை மக்களுக்கு வழங்கி வரும் லாரன்ஸ் இந்த விஷயத்திலும் முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது.

விஷால்

இதே போன்று நடிகரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் தன்னால் இயன்ற உதவிகளை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி உதவிகள் செய்யும்படி ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.

சந்தானம்

இதே போன்று நடிகர் சந்தானம் கடலூர் மக்களுக்கு மருந்துகள் வழங்கி உதவி செய்தார். சந்தானத்தின் ரசிகர்களும் உணவுகள் வழங்கி மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிகள் செய்தனர்.

சரத்குமார்

நடிகர் சரத்குமார் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கி உதவிகள் செய்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்

மழையால் பதிக்கப்பட்ட காஞ்சிபுரம் பகுதி மக்களுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏராளமான நடிகர்கள் இருந்தும் ஒருசிலர் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை,மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது.

English summary
Actors Vishal, Santhanam, Sarathkumar and Raghava Lawrence has been distributed by free clothes, food and medicines to flood affected people in Chennai and Cuddalore.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil