»   »  வேதாளத்தையும் தூங்கா வனத்தையும் வெளுத்தெடுத்த மழை... சனி, ஞாயிறு வசூல் மழை மனசு வச்சாதான்!

வேதாளத்தையும் தூங்கா வனத்தையும் வெளுத்தெடுத்த மழை... சனி, ஞாயிறு வசூல் மழை மனசு வச்சாதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் வேதாளம் வசூலில் சாதனை, தூங்கா வனம் ஓஹோன்னு வசூல் என்றெல்லாம் ஆளாளுக்கு தோன்றியதை செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருக்க, இந்த இரண்டு தீபாவளிப் பட்டாசுகளையுமே மாமழை நமத்துப் போக வைத்துவிட்டது என்பதே உண்மை.

பாலாற்றில் வெள்ளம் என்ற செய்தி கேட்டதும் கொட்டும் மழையிலும் அடித்துப் பிடித்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கும், செங்கல்பட்டுக்கும் படையெடுத்த கூட்டத்தில் பத்தில் ஒரு பகுதி கூட இந்த இரு படங்களையும் பார்க்கச் வரவில்லை.. ஆனால் ரசிகர்கள் இஷ்டத்துக்கு பொய்த் தகவல் பரப்பி வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்கள் என்று என்று புலம்புகிறார் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் ஒருவர்.


Heavy rain affects Vedalam and Thoonga Vanam collection

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் சில மால்களைத் தவிர, மற்ற நகரங்கள், கிராமம் சார்ந்த நகரங்களில் இந்த இரு படங்களுக்குமே பெரிய கூட்டமில்லை. சில தியேட்டர்களில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பெரிய கூட்டமாகக் காண்பித்து, செய்தியை உருவாக்கிய அவலமும் நடந்திருக்கிறது.


காரணம் பேய் மழை. தியேட்டர்கள் உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ரசிகர்கள் தவிர, பொதுவான பார்வையாளர்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை.


இதுவரை இந்த இரு படங்களின் வசூல் குறித்தும் தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் நிலை அப்படி.


ஆனால் பேஸ்புக், ட்விட்டரில் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் வசூல் என்று குறிப்பிட்டு, அதையே அதிகாரப்பூர்வ செய்தியாக்கும் வேலையில் சிலர் இறங்கியிருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் சம்பந்தப்பட்ட படங்களின் விநியோகஸ்தர்கள்.


இன்னும் இரு தினங்கள்தான் இந்தப் படங்களின் வசூலை நிர்ணயிக்கும். அவை இன்றும் நாளையும். இன்று முழுக்க மழை பெய்யாமல் இருந்து, நாளையும் இந்த நிலை தொடர்ந்தால், திங்களன்று படங்களின் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர்களே சொல்லக்கூடும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில்.

English summary
Heavy rain affected the collection of Ajith's Vedalam and Kamal's Thoongavanam in Tamil Nadu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil