»   »  மழையாவது, வெள்ளமாவது: வேதாளத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்

மழையாவது, வெள்ளமாவது: வேதாளத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கன மழை கொட்டித் தீர்த்தும் ரசிகர்கள் வேதாளம் மற்றும் தூங்காவனம் ஆகிய படங்களை பார்க்க தியேட்டர்களில் குவிந்தனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த வார இறுதியில் இருந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


Heavy rain can't stop fans from watching Vedhalam, Thoongavanam

கனமழையால் கடலூர் மாவட்டம் தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று மழை பெய்யக் கூடாது என்று வேண்டிய மக்களின் பிரார்த்தனை நிறைவேறவில்லை. காலையில் இருந்தே மாநிலத்தன் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டத் துவங்கியது.


இப்படி மழை ஊத்து ஊத்து என்று ஊத்துகிறதே என வேதாளம், தூங்காவனம் ரிலீஸான தியேட்டர் உரிமையாளர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனால் ரசிகர்களோ மழையாவது எங்களை தடுப்பதாவது என்று கொட்டும் மழையிலும் படம் பார்க்க தியேட்டர்களில் குவிந்தனர்.


தீபாவளி அன்று வேதாளம் ஓடிய தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. தூங்காவனம் ஓடிய தியேட்டர்களில் 70 சதவீத இருக்கைகள் நிறைந்துவிட்டன. கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது அஜீத், கமல் ரசிகர்கள் வேதாளம், தூங்காவனத்தை கொண்டாடி தியேட்டர் உரிமையாளர்கள் வயிற்றில் பாலை வார்த்தனர்.

English summary
Ajith and Kamal Haasan fans have thronged theatres on Diwali inspite of heavy rain to watch Vedhalam and Thoongavanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil