பாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி!
Recommended Video

மும்பை : சமீபத்தில் நடிகர் சூர்யாவின் உயரத்தை பற்றி இரண்டு டிவி தொகுப்பாளர்கள் விமர்சித்தது தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
தற்போது அதைப் போலவே பாலிவுட்டிலும் தீபிகா மற்றும் கத்ரீனாவுக்கு தங்கள் உயரத்தால் வாய்ப்பு கிடைக்காது என ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனால், பாலிவுட்டில் இந்த விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது. நடிகர் அமிதாப் பச்சன் செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு பதிலடியாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.

உயரம் சர்ச்சை
நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்ததால் தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு தொகுப்பாளினிகள் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகினர். விஷால் உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்தது பெரும் விவாதமானது.

ரசிகர்கள் கொந்தளிப்பு
இந்நிலையில் பாலிவுட்டிலும் இதேபோல ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. ஷாகித் கபூர், அமீர் கான் ஆகியோர் உயரம் குறைவானவர்கள் என்கிற பொருளில் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது. இது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

தீபிகா, கத்ரீனா உயரம்
ஷாஹித் கபூர், அமீர் கான் போன்ற நடிகர்களுடன் ஒப்பிட்டால் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே ஆகியோர் மிக உயரமாக இருப்பார்கள். எனவே, அவர்களது படங்களில் வாய்ப்பு கிடைக்காது என ஒரு பிரபல பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
அமிதாப் பச்சன் பதிலடி
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ட்விட்டரில் நடிகர் அமிதாப் பச்சன், "நான் 49 வருடமாக 200 படங்கள் நடித்துள்ளேன். என் உயரம் 6'2'', உங்களுக்கு உயரம் பற்றிய பிரச்சனை எப்போதும் வராது" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











