ஹலோ அறிவுஜீவி.. யாரு இடியட்.. பார்த்திபன் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: யாரு இடியட்? அறிவுஜீவி பார்த்திபன் என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இந்த வாரம் ப்ளூ சட்டை மாறன் மற்றும் இயக்குநர் பார்த்திபன் இடையே சண்டை சூடு பறக்கிறது. பச்சை சட்டை என ஆர்ஜே பாலாஜி பஞ்சாயத்து பண்ண நிலையில், இடியட்டாக பேசுகிறார் என பார்த்திபன் நேரடியாகவே பாய்ந்து விட்டார்.

மேலும், ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றும் வீடியோக்களையும், செருப்பு மாலை அணிவித்தது ரசிகர்கள் தன் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடு என்றும் பார்த்திபன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ப்ளூ சட்டை மாறன் ஃப்ரூப்

ப்ளூ சட்டை மாறன் ஃப்ரூப்

சர்வதேச பிரபலம் வாய்ந்த வெரைட்டி எனும் சினிமா வெப்சைட்டில் ஃபிஷ் அண்ட் கேட் திரைப்படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக ப்ரூஃப் கொடுத்து இரவின் நிழல் படத்தின் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மக்களை ஏமாற்றுகிறார் என தொடர்ச்சியாக அவருக்கு எதிரான ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகிறார்.

ஒத்த செருப்பும் மோசடி

ஒத்த செருப்பும் மோசடி

இரவின் நிழல் பிரச்சனையில் இருந்து பார்த்திபனின் முந்தைய படமான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தையும் பார்த்திபன் இப்படித்தான் மோசடி செய்து விளம்பரப்படுத்தினார் என இன்னொரு ட்வீட்டையும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். இயக்குநரே சிங்கிள் ஆளாக ஒட்டுமொத்த படத்திலும் நடித்த முதல் தமிழ் படம் ஒத்த செருப்பு இல்லை என்றும் 2015ல் வெளியான கர்மா படம் தான் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

பிரிகிடா பிரச்சனை

பிரிகிடா பிரச்சனை

இரவின் நிழல் நடிகை பிரிகிடா சேரி மக்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபனும், முன்னர் சேரி மக்கள் அப்படி பேசினார்கள், இப்போ படித்து முன்னேறியுள்ளனர் என பார்த்திபன் போட்ட ட்வீட்டும் சர்ச்சையை கிளப்பியது. சேரின்னு சொல்லாதீங்க பார்த்திபன் என ப்ளூ சட்டை மாறன் அந்த பிரச்சனையையும் கையில் எடுத்து விளாசி இருந்தார்.

திட்டிய பார்த்திபன்

திட்டிய பார்த்திபன்

இரவின் நிழல் திரைப்படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம். ஃபிஷ் அண்ட் கேட் வாய்ஸ் ஓவரில் மட்டுமே நான் லீனியர் படமாக அது நான் லீனியர் என ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்டை ஷேர் செய்த பார்த்திபன், மீண்டும் மீண்டும் இதே போன்ற இடியாட்டிக் ஆர்க்யூமென்ட்ஸைத் தான் ப்ளூ சட்டை மாறன் முன் வைத்து வருகிறார் என திட்டி இருந்தார்.

யாரு இடியட்

யாரு இடியட்

மறுபடியும் நீங்க ப்ரூஃப் காட்டாமல் யாரோ போடும் ட்வீட்டை ஷேர் செய்து திட்டுறீங்க, நான் வெரைட்டி இதழின் ப்ரூஃப் போட்டுருக்கேன் என சொல்லி உள்ள ப்ளூ சட்டை மாறன், ஹலோ அறிவுஜீவி சார், இங்கே யாரு இடியட் என்கிற கேள்வியை முன் வைத்து தன்னை திட்டிய பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே செல்லும் நிலையில், பார்த்திபன் இதை அப்படியே விட்டு விடுங்க என ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X