»   »  ஒரு செல்போனிலிருந்து கிளம்பும் பேய்...! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!

ஒரு செல்போனிலிருந்து கிளம்பும் பேய்...! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு செல்போனிலிருந்து பேய் கிளம்பினால் என்னவாகும்? என்னென்ன கலாட்டா நடக்கும்... இப்படி யோசித்து ஒரு திரைக்கதையை உருவாக்கி அதற்கு ஹலோ நான் பேய் பேசறேன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

குஷ்புவின் அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குனர் சுந்தர். சி தயாரிக்கும் படம் இது.


Hello Naan Pei Pesaren

வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், விடிவி கணேஷ், மதுமிதா, சிங்கம்புலி, யோகிபாபு, சிங்கப்பூர் தீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


Hello Naan Pei Pesaren

தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்பி எடிட்டிங் செய்துள்ளார்.


இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களை இயக்கிய எஸ் பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகிறார்.


இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், "இது திகிலுடன் கூடிய ஒரு காமெடி பேய்ப்படம். இது மற்ற காமெடி பேய் படங்களிலிருந்து மாறுபட்ட திரைப் படமாக இருக்கும்.


ஒரு செல்ஃபோனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த செல்ஃபோன் யார் யாரிடத்தில் பயணிக்கிறது, அவர்களை அந்தப் பேய் என்ன பாடு படுத்துகிறது, அதனால் அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை திகில் கலந்த காமெடியுடன் சொல்லியிருக்கிறோம். இந்த கதையை இயக்குனர் சுந்தர்.சி அவர்களிடத்தில் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. படத்திற்கான அனைத்து வேலைகளையும் உடனே துவங்க சொல்லிவிட்டார்.


Hello Naan Pei Pesaren

இத்திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்", என்றார்.


அடுத்த மாத இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Hello Naan Pei Pesaren is a new horror movie produced by director Sundar C and releasing November end.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil