»   »  35வது திருமண நாளை ‘தனியே தன்னந்தனியே’ கொண்டாடி மகிழ்ந்த ஹேமமாலினி- தர்மேந்திரா!

35வது திருமண நாளை ‘தனியே தன்னந்தனியே’ கொண்டாடி மகிழ்ந்த ஹேமமாலினி- தர்மேந்திரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நட்சத்திர தம்பதியான ஹேமமாலினி - தர்மேந்திரா தங்களது 35வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

திருச்சியில் கடந்த 1948ம் ஆண்டு பிறந்தவர் ஹேமமாலினி. தந்தையின் வேலை காரணமாக டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த ஹேமமாலினி, பரதமும் கற்றார்.

‘வெண்ணிற ஆடை' தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப் பட்டு, 'இது ஸ்கிரீனில் காட்ட முடியாத முகவெட்டு' என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்டார் ஹேமமாலினி. அதனைத் தொடர்ந்து பாலிவுட் சென்ற ஹேமமாலினி அங்கு 20 வருடங்களுக்கும் மேலாக கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

ரீல் டூ ரியல்...

ரீல் டூ ரியல்...

ஷோலே, சாரஸ், ஆஸ் பாஸ், சீதா அவுர் கீதா உள்ளிட்டப் பட வெற்றிப்படங்களில் தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஹேமமாலினி. பின்னாளில் இந்த ரீல் ஜோடி, ரியல் ஜோடி ஆனது.

2வது திருமணம்...

2வது திருமணம்...

பிரகாஷ்கவுரை மணந்து ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தார் தர்மேந்திரா. ஆனபோதும் ஹேமமாலினி மீது காதல் வயப்பட்ட தர்மேந்திரா, கடந்த 1980ம் ஆண்டு ஹேமமாலினியின் தாயார் ஜெயா சக்கரவர்த்தியிடம் நேரில் சென்று பெண் கேட்டு ஹேமமாலினியை மணந்தார்.

மதமாற்றம்...

மதமாற்றம்...

இந்து மத முறைப்படி முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி பிரியாமல் இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பதால் முஸ்லீமாக இருவருமே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பின்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்தார்.

2 பெண் குழந்தைகள்...

2 பெண் குழந்தைகள்...

தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதிக்கு இஷா, ஆஷா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி தங்களது 35வது திருமண நாளை இத்தம்பதி கொண்டாடியது.

காதலால் இணைந்தோம்...

காதலால் இணைந்தோம்...

அன்றைய தினம் தாங்களது பல அரிய புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார் ஹேமமாலினி. அதில், குட்மார்னிங், தரம்ஜியும், நானும் திருமண நாளை அருமையாக கொண்டாடினோம். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து கொண்டாடினோம். இணைந்து இருப்பதுதான் காதல்' என்று கூறியுள்ளார் ஹேமா.

English summary
Bollywood’s Hema Malini and yesteryear’s action hero Dharmendra celebrated their anniversary on Saturday. “Good morning! Dharamji & a I celebrated a wonderfully relaxing Wedding Anniversary eve all by ourselves after a long time. Love is togetherness,” Malini tweeted. “Our anniv is today.”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil