»   »  பாலிவுட் பற்றி பெரிய குண்டை தூக்கிப் போட்ட ஹேம மாலினி

பாலிவுட் பற்றி பெரிய குண்டை தூக்கிப் போட்ட ஹேம மாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே நடிக்கிறார்கள். என் வயது நடிகைகளை வைத்து யாரும் படம் எடுக்க விரும்பவில்லை என்று ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக இருந்தவர் ஹேமமாலினி(68). தற்போது அவர் அம்மா, பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக எம்.பி.யாக உள்ளார்.


இந்நிலையில் ஹேமமாலினிக்கு ஒரு வருத்தம் உள்ளது.


நடிகைகள்

நடிகைகள்

தற்போது என் வயது நடிகைகளை மையமாக வைத்து யாரும் படம் எடுக்க விரும்புவது இல்லை. தற்போதும் எங்களால் படத்தை எங்கள் தோளில் தாங்க முடியும். நம்புங்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் உள்ளன என்கிறார் ஹேமமாலினி.
மாதுரி தீக்சித்

மாதுரி தீக்சித்

மாதுரி தீக்சித், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரை ஏன் அடிக்கடி ஹீரோயின்களாக பார்க்க முடிவது இல்லை. இந்த கேள்விக்கு பாலிவுட் இயக்குனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.


அனுஷ்கா

அனுஷ்கா

ஆண்களுக்கு வயதானாலும் கூட அவர் விரும்பும் வரை ஹீரோக்களாகவே நடிப்பார்கள். ஆனால் நடிகைகள் இளமையாக இருக்கும் வரை தான் மவுசா? என்று நடிகை அனுஷ்கா சர்மா கூட கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டமா என்று ஹேமமாலினியும், அனுஷ்கா சர்மாவும் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்பதும் நியாயம் தானே.
English summary
Bollywood actress Hema Malini said that no one is ready to take a movie with actress of her age. She exposes the other side of Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil