»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக (என்.எஃப்.டி.சி.) தலைவராக ஹிந்தித் திரைப்பட நடிகை ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு அமைப்பான என்.எஃப்.டி.சி.யின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமமாலினியின்நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான ஒரு கடிதமும் ஹேமமாலினிக்குஅனுப்பப்பட்டுவிட்டது.

கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஹேமமாலினி, என்.எஃப்.டி.சி. தலைவராக பொறுப்பேற்ற ஒப்புக் கொண்டார். இருப்பினும், அது தொடர்பாக தனதுஅதிகாரப்பூர்வமான ஒப்புதலை எழுத்துமூலம் இன்னும் அவர் அளிக்கவில்லை.

என்.எஃப்.டி.சி. அமைப்பின் தலைவர் மட்டுமல்லாமல் அமைப்பின் பிற இயக்குநர்கள் பதவிக்கான நபர்களையும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

என்.எஃப்.டி.சி. அமைப்பின் தலைவராக இருந்த தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் டி.வி.எஸ். ராஜு, 1993-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்குப்பிறகு இதுவரை தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil