Just In
- 32 min ago
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்!
- 38 min ago
டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்!
- 1 hr ago
இவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்!
Don't Miss!
- News
பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
- Automobiles
பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்!! விரைவில் அறிமுகமாகிறது என்எஸ்250
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Finance
இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகையான சித்ராவை அவரது கணவர் ஹேமந்த் பாடாய் படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகிறது.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
தொழில் அதிபர் ஹேமந்தை காதலித்து பதிவு திருமணம் செய்த சித்ரா அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

குடும்பத்தினர் மறுப்பு
சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. சித்ரா தூக்கிட்டுதான் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அவர் கழுத்தில் காயங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஆகையால் அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

கணவர் கைது
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை உறுதி செய்தது. சித்ரா மரணம் தொடர்பாக விசாரித்த நசரத் பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர் ஹேமந்த்தான் என்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆபாசமாக பேசி..
ஹேமந்திடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டது தெரியவந்தது. சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அன்று இரவு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியதை ஹேமந்த் ஏற்கனவே போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

ஹைகோர்ட்டில் மனு..
இந்நிலையில் ஹேமந்தின் நண்பரான ரோஹித், ஹேமந்த் தான் சித்ரா தற்கொலைக்கு காரணம் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் ரோஹித்.

கடித்து குதறி..
தானும் ஹேமந்தும் 10 வருடங்களுக்கு மேலாய் நண்பர்களாய் இருந்து வருவதாய் கூறிய அவர், சித்ரா மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். அந்த வகையில் சித்ராவை ஹேமந்த் கடித்து குதறி வைத்தார் என்றும் சந்தேகப்பட்டு பல டார்ச்சர்களை கொடுத்தார் என்றும் கூறினார்.

கன்னித்தன்மை சோதனை
மேலும் சித்ராவுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவரான தனது மனைவியிடம் கேட்டார் என்றும் தனது அப்பார்ட் மென்ட்டில் உள்ள மருத்துவர் ஒருவரிடமும் சித்ராவுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஹேமந்த் கேட்டார் என்றும் கூறினார்.

நீ பத்தினி என்றால்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா முதலிரவு காட்சியில் நடித்த பிறகு ஹேமந்தின் சந்தேகம் இன்னும் அதிகரித்தது என்றும் அவருடன் சேர்த்து வைத்து பேசி கொடுமை படுத்தினார். சித்ராவிடம் சண்டை போடும் போதெல்லாம் நீ பத்தினி என்றால் செத்து நிரூபி என்றும் கூறியிருக்கிறார் ஹேமந்த்.

போனில் பேசிய ஆடியோ
இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட பிறகு ஹேமந்த் தனது நண்பரான ரோஹித்திடம் போனில் பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திடுக் தகவல்கள்..
இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் ரோஹித் ஹேமந்தின் அறியப்படாத பல பக்கங்களை வெளிக்காட்டி வருகிறார். ஹேமந்த் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் அவர்களை மிரட்டி பணம் பறித்தார் என்பது உட்பட ரோஹித் கூறும் திடுக் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.