twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் 2 நாள் சோகம்.. 3வது நாள் மகிழ்ச்சி.. காட்டிக்கொடுத்த முகம்.. ஹேமந்த் சிக்கியது இப்படிதான்!

    |

    சென்னை: சித்ரா மரண வழக்கில் அவரது கணவரான ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    யார காப்பாத்தன்னு புரியல Hemanth அப்பா ஆவேச பேட்டி | JusticeForChithra

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. பல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாகவும் பணியாற்றியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த புதன் கிழமை நசரத் பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

    நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.. கடைசி சண்டையில் கதறிய சித்ரா.. வெளியான திடுக் தகவல்!நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.. கடைசி சண்டையில் கதறிய சித்ரா.. வெளியான திடுக் தகவல்!

    உடனிருந்த கணவர்..

    உடனிருந்த கணவர்..

    கணவர் உடன் இருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் அவரது முகத்தில் காயங்கள் இருந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால் சித்ராவின் உடலை மீட்ட உடனேயே உடனிருந்த கணவர் ஹேமந்திடம் விசாரணையை தொடங்கினர் போலீசார்.

    நகக் கீறல்கள் யாருடையது?

    நகக் கீறல்கள் யாருடையது?

    ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவர் தற்கொலைதான் செய்து கெண்டார் என்றும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவருடைய நகக் கீறல்கள் தான் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

    செல்போன் ஆய்வு

    செல்போன் ஆய்வு

    இதனைத் தொடர்ந்த் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்ரிதல் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்காக அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள், வாட்ஸ் அப் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அம்பலமான தகவல்கள்

    அம்பலமான தகவல்கள்

    அதில் சித்ராவின் செல்போனில் இருந்த சில போட்டோக்கள் அழிக்கப்பட்டிருந்ததும், மேலும் சில மெஸேஜ் கால் போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததும் அம்பலமானது. இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    முன்னுக்கு பின் முரணாக

    முன்னுக்கு பின் முரணாக

    அதேநேரத்தில் சித்ராவின் கணவரான ஹேமந்த் மற்றும் சித்ராவின் தயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஹேமந்த் அளித்த பதில்கள் அனைத்தும் முன்னுக்கு பின முரணாகவே இருந்தது.

    சோகமே உருவாக

    சோகமே உருவாக

    முதல் இரண்டு நாட்கள் விசாரணைக்கு சோகம் சொட்ட சொட்ட காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் ஹேமந்த். போலீசாரின் கேள்விகளுக்கும் சோகமே உருவாக முகத்தை சோகமாக வைத்துக்கொண்டுதான் பதில் கூறியுள்ளார்.

    சிரித்த முகத்துடன்

    சிரித்த முகத்துடன்

    ஆனால் மூன்றாவது நாளே அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முகத்தில் சிரிப்புடன், மனைவி இல்லாத சோகம் கொஞ்சம் கூட இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் ஹேமந்த்.

    6 நாட்கள் விசாரணை

    6 நாட்கள் விசாரணை

    இந்த இடத்தில்தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்துதான் அவரிடம் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் 6 நாட்கள் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆபாசமாக பேசி..

    ஆபாசமாக பேசி..

    இதில் சித்ரா மரணத்திற்கான பல திடுக்கிடும் காரணங்கள் வெளியானது. அதன்படி சம்பவத்தன்று ஹேமந்துதான், சித்ராவை காரில் அழைத்து வந்ததும், காரில் வரும்போதே சக நடிகர்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியுள்ளார் ஹேமந்த்.

    நீதான் எல்லாமே..

    நீதான் எல்லாமே..

    அறைக்கு வந்தும் சந்தேக சண்டை தொடர்ந்துள்ளது. சித்ராவை ஆபாசமாகவும் கடுமையான வார்த்தைகளாலும் பேசியுள்ளார் ஹேமந்த். தனது காதல் கணவர் ஆபாசமாக பேசுவதை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா நீதான் எனக்கு எல்லாமே, நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று கூறி கதறியுள்ளார்.

    காட்டிக் கொடுத்த உண்மை முகம்

    காட்டிக் கொடுத்த உண்மை முகம்

    ஆனால் சித்ராவின் கதறல்களை காது கொடுத்து கேட்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். தன்னுடைய வார்த்தைகளாலே சித்ராவை கொன்றுவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நடித்த ஹேமந்தின் உண்மை முகம் இறுதியில் அவரை காட்டிக் கொடுத்து விட்டது.

    English summary
    Hemanth's real face brought the truth to light. Chithra commit suicide in a star hotel on 9th when her husband was with her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X