விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்...கோப்ரா ஆடியோ விழாவிற்கு வருவாரா?மாட்டாரா?..தீயாய் பரவும் தகவல்

சென்னை : நடிகர் விக்ரம் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரம், அடுத்ததாக கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் பா.ரஞ்சித் படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. பிறகு அவருக்கு மாரடைப்பு கிடையாது என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்தார்.

 விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் கிடையாது

விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் கிடையாது

விக்ரமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இதயத்தில் லேசான அசவுகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்

விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் விக்ரம், நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, விக்ரம் தற்போது நலமுடன் உள்ளாராம். அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு விட்டாராம். இன்று மாலை அல்லது நாளை விக்ரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என குறப்படுகிறது.

கோப்ரா ஆடியோ விழாவில் பங்கேற்பாரா

கோப்ரா ஆடியோ விழாவில் பங்கேற்பாரா

அதோடு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜுலை 11 ம் தேதி சென்னையில் நடக்கும் கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறதாம்.

கோப்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

கோப்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார்.இவர்களுடன் மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்திவ், பத்மபிரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் விழா

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் விழா

ஆகஸ்ட் 11 ம் தேதி கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வரும் 11 ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியுடன் கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

எங்கு நடக்கிறது

எங்கு நடக்கிறது

கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை Phoenix Market City யில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் விக்ரம் கலந்து கொள்கிறார் என்பதை படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X