Idli Kadai: தனுஷின் இட்லி கடை படத்தை பார்க்க தூண்டும்.. 5 முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள திரைப்படம் 'இட்லி கடை'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. பண்டிகைக் காலம் என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் படத்தின் முன் பதிவு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், டிக்கெட் முன்பதிவு சாதனைகள் படத்தின் வெற்றிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளன. கிராமத்துத்து கதை அம்சத்தை கொண்ட இட்லி கடை திரைப்படத்தி ஏன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
'இட்லி கடை' திரைப்படம் மூலம் தனுஷின் தனித்துவமான இயக்கத்தையும், நடிப்பையும் ஒரே நேரத்தில் காண ஒரு பொன்னான வாய்ப்பு. இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டும் இணைந்து ஒரு புதிய சவாலாக மாறி, இப்படத்தை யதார்த்தமாகவும், பார்வைக்கு வசீகரமானதாகவும் மாற்றியுள்ளது. 'ராயன்' படத்திற்குப் பிறகு, தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் நகைச்சுவை உணர்வு மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பை ரசிகர்கள் ஒரே படத்தில் அனுபவிக்க இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

தனுஷின் இட்லி கடை: அதே போல இப்படத்தின் நடிகை நித்யா மேனன், 'மெர்சல்', 'தலைவன் தலைவி' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, கிராமப்புற கதைக்களத்துடன் புதிய தோற்றத்தில் வருகிறார். அவரது மாடர்ன் மற்றும் இயல்பான நடிப்பு, கிராம வாழ்க்கையின் நிழல்களையும், மகிழ்ச்சியையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இது அவரது நடிப்புத் திறனில் ஒரு புதிய பரிமாணத்தை பார்க்கலாம். தேசிய விருது பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்திற்குப் பிறகு, நித்யா மேனனும் தனுஷும் மீண்டும் இந்த படத்தில் இணைவது இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு.
அதிரடியான வில்லன்: படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். அவரது தங்குதடையற்ற நடிப்பு, கதையின் பதற்றத்தையும் திரில்லர் அம்சத்தையும் மேலும் கூட்டுகிறது. அருண் விஜய் ஒரு வெற்றி நாயகனாக இருந்தபோதிலும், இட்லி கடை படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு, இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். 'என்னை அறிந்தால்' படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெற்ற வெற்றியைப் போல, 'இட்லி கடை' படத்திலும் தனது வலுவான நடிப்பை வெளிப்படுத்துவார் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
யார் நடிப்பு சூப்பர்: அதேபோல படத்திற்கு கூடுதல் பலமாக ராஜ் கிரண், சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற மூத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பலமான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்த மூவரில் யார் அதிகம் ரசிகர்களைக் கவர்வார்கள் என்பதை திரையில் காண்பதற்கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஜிவியின் இசை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அவரது இசை, கதையின் உணர்ச்சிபூர்வமான தருணங்களையும், பல்வேறு சூழல்களையும் சிறப்பாக மேம்படுத்துகிறது. தனுஷுடன் 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'அசுரன்' போன்ற வெற்றிப் படங்களில் ஜி.வி. பிரகாஷ் குமார் இதற்கு முன்பு இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒருமுறை ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இசையை திரையரங்குகளிலும், இசை வெளியீடுகளிலும் அனுபவிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மொத்தத்தில், "இட்லி கடை" படம் தனுஷ் ரசிகர்களுக்கும், குடும்பத்தோடு சிரித்து ரசிக்க விரும்புவோருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.


Click it and Unblock the Notifications











