Dude First Review - பிரதீப் ரங்கநாதனின் டியூட் முதல் விமர்சனம்.. டாப் கிளாஸ்.. படம் பட்டாசா இருக்காம்
சென்னை: லவ் டுடே, டிராகன் என வரிசையாக இரண்டு படங்களின் மூலம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன். அவர் இப்போது கீர்த்திவாசன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மமிதா பைஜு, சரத்குமார் என பலர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
இவரெல்லாம் ஹீரோவா என்றுதான் லவ் டுடே படத்தின் போஸ்டரும், ட்ரெய்லரும் வெளியானபோது பெரும்பாலானோர் நினைத்தார்கள். பலர் பிரதீப் ரங்கநாதனை கிண்டல் செய்யவும் செய்தார்கள். அவர் அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தன்னிடம் இருக்கும் திறமையை நம்பி தொடர்ந்து நடித்தார். படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அந்தப் படத்துக்கு பிறகு நடித்த டிராகன் திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாயை அள்ளியது.
டியூட் பிரதீப்: இரண்டு படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசாக வெடித்ததை அடுத்து இப்போது கீர்த்திவாசனின் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. பிரதீப் ஹீரோவாக நடித்திருப்பதால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லர் முழுக்க முழுக்க எனர்ஜி பேக்கேஜாக இருக்கிறது. காதல், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என அத்தனையும் கலந்திருக்கிறது. அதிலும் பிரதீப் - மமிதாவின் கெமிஸ்ட்ரியை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். இப்படத்துக்கு போட்டியாக பைசன், டீசல் ஆகிய படங்கள் வந்தாலும் கண்டிப்பாக இப்படம் பந்தயம் அடிக்கும் என்கிறார்கள் பிரதீப்பின் படையினர்.
மமிதாவின் அறிமுகம்: அதேபோல் மமிதா பைஜு இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். ட்ரெய்லரில் அவர் வரும் இடம் எல்லாம் அழகாக இருக்கிறது என்றும்; இனி கோலிவுட்டில் மமிதா பைஜுவின் ஆட்சிதான் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். படத்துக்கு இன்னொரு பலமாக சாய் அபயங்கரின் இசையும் இருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் Oorum Blood பாடல் அனைவரிடமும் வைபை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்படி இருக்கு படம்?: படம் மொத்தம் 139 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்டிருக்கிறது. அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள். படத்தின் ரன்னிங் டைமும் அதிகமும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சரியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தெரியவந்திருக்கிறது. படத்துக்கு U/A சர்ட்டிஃபிக்கேட் கொடுத்திருக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை ஆஹா ஓஹோவென்று பாராட்டிவிட்ட்டார்களாம். மேலும் பிரதீப், மமிதா, சரத்குமார், ரோகிணி ஆகியோரின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது என்றும், இசை மற்றும் கேமரா டாப் கிளாஸில் இருப்பதாக அவர்கள் பாராட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











