»   »  இந்தா அடுத்த ராயல்டி பிரச்சனையை கிளப்பும் ஞானவேல்ராஜா

இந்தா அடுத்த ராயல்டி பிரச்சனையை கிளப்பும் ஞானவேல்ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படங்கள், பாடல்களை தொலைக்காட்சி சேனல்களுக்கு ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும். அதற்கு ஏன் ராயல்டி தொகை கேட்கக் கூடாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பாடல்களை தன் அனுமதியின்றி மேடையில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அது குறித்து தான் கோலிவுட்டில் அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா

இளையராஜா

இளையராஜா-எஸ்.பி.பி. இடையே ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தான் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஞானவேல்ராஜா

ஞானவேல்ராஜா

பாடல்களுக்கு இளையாராஜா ராயல்டி கேட்கும் நேரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புதிய பிரச்சனையை எழுப்பியுள்ளார். அதாவது
படங்களை தொலைக்காட்சி சேனல்களுக்கு ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என கேட்கிறார் அவர்.

ராயல்டி

ராயல்டி

படங்கள், பாடல்கள், காமெடி காட்சிகளின் ராயல்டி தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது அதற்கான ராயல்டி தொகையை ஏன் தொலைக்காட்சி சேனல்களிடம் வசூல் செய்யக் கூடாது என்று ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல்

தேர்தல்

ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியில் உள்ளார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்த பிறகு இந்த ராயல்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
As Isaignani Ilaiyaraja's royalty issue has gained momentum, producer Gnanavelraja has come up with yet another royalty problem.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil