நயன்தாரா கழுத்தில் விக்கி எத்தனை மணிக்கு தாலி கட்ட போகிறார் தெரியுமா... முழு விபரம் இதோ

சென்னை : விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த திருமணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோலிவுட்டின் செம க்யூட்டான, விஐபி காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் கேட்டு வந்தனர். ஒரு வழியாக அந்த நாள் தற்போது வந்து விட்டது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சமீபத்தில் தங்களின் திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதை உறுதி செய்யும் விதமாக திருமண அழைப்பிதழும் இணையத்தில் கசிந்து விட்டது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி திருப்பதியில் நடப்பதாக முதலில் கூறினார்கள். ஆனால் அழைப்பிதழில், மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக திடீரென இடத்தை மாற்றினார்கள் என்பது புரியாமல் அனைவரும் அது பற்றி கேட்டு வந்தனர். குறிப்பிட சிலருக்கு மட்டுமே அனுமதி என்பதால் மீடியாக்களை தவிர்த்து இடம் மாற்றப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

திருப்பதியில் நடக்காதது ஏன்

திருப்பதியில் நடக்காதது ஏன்

ஆனால் உண்மையில் அது காரணம் இல்லை. திருமண விழாவில் பங்கேற்க 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என திருப்பதி தேவஸ்தானம் கூறி விட்டது. ஆனால் விருந்தினர்களின் லிஸ்ட் அதிகமாக இருந்ததால் திருமணம் நடைபெறும் இடத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றி விட்டார்களாம். திருமணத்தில் இருவரின் வீட்டு உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

எங்கே திருமணம் நடக்க போகுது

எங்கே திருமணம் நடக்க போகுது

லேட்டஸ்ட் தகவலின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விவிஐபிக்கள் 30 பேர் மட்டும் தான். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட சிலரும் விவிஐபி.,க்கள் லிஸ்டில் உள்ளார்களாம். மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது.

எப்போ தாலி கட்ட போகிறார்

எப்போ தாலி கட்ட போகிறார்

ஜுன் 9 ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்ட போகிறார். முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருமண வரவேற்பு எப்போ

திருமண வரவேற்பு எப்போ

மகாபலிபுத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஜுன் 8 ம் தேதி சென்னையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண வரவேற்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X