»   »  விசுவாசம் அப்டேட், அஜீத்தின் அதிரடி முடிவு: தல ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி

விசுவாசம் அப்டேட், அஜீத்தின் அதிரடி முடிவு: தல ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஸ்வாசம் படத்தில் அஜீத்துடன் ஜோடி சேரப் போவது யார் தெரியுமோ?- வீடியோ

சென்னை: தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

விவேகம் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைத்துவிட்டு வேறு எந்த அப்டேட்டும் சிவா கொடுக்கவில்லை.

சிவா சார் ஏதாவது அப்டேட் கொடுங்க என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அஜீத்

அஜீத்

விசுவாசம் பற்றிய அப்டேட் மட்டும் அல்ல அஜீத் பற்றியும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இது தல ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஷூட்டிங்

ஷூட்டிங்

விசுவாசம் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 22ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க சிவா திட்டமிட்டுள்ளாராம்.

சூர்யா 36

சூர்யா 36

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை அன்று விசுவாசத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் சிவா. இந்த தீபாவளி தல தீபாவளி தான். தீபாவளிக்கு விஜய் 62 மற்று சூர்யா 36 படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்

படம்

இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளாராம். அதனால் தான் விசுவாசம் படப்பிடிப்பை விறுவிறுவென்று நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

களைகட்டும்

களைகட்டும்

தீபாவளிக்கு தல, தளபதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்கள் வெளியாக உள்ளன. மூன்று பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், வசூல் பாதிக்கக்கூடுமே என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

English summary
Director Siva has reportedly decided to start Ajith starrer Viswasam shooting on february 22nd. Siva is planning to release Viswasam as Diwali special. It is Thala diwali for Ajith fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil