»   »  இனி சென்சாரில் யு, யுஏ கிடையாது... இரண்டே உறுப்பினர்கள் தான்

இனி சென்சாரில் யு, யுஏ கிடையாது... இரண்டே உறுப்பினர்கள் தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா எடுப்பதை விட ரிலீஸ் செய்வதுதான் சிரமம் என்பதை சினிமா எடுப்பதையோ, ரிலீஸ் செய்வதையோ விட சரியான சென்சார் சர்டிஃபிகேட் வாங்குவது தான் கடும் சிரமம் என்ற லெவலுக்கு மாற்றி விட்டது சென்சார் போர்டு. அனுராக் காஷ்யப் முதல் நம்ம ஸ்ரீகாந்த் வரை புலம்பும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு வரப்போகிறதாம்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தகவலின்படி, CBFC (தணிக்கைக் குழு) இனிமேல் படங்களுக்கு தணிக்கைக் குழு U, A, U/A போன்ற சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும் என்பதுபோல் சட்டம் வரப்போகிறது.

Here is a good news for the film makers

இது குறித்து CBFC தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியதாவது:

தணிக்கைக் குழுவில் ஏற்படும் சர்ச்சையால் Cinematograpy act (ஒளிப்பதிவு சட்டம்) மூலம் இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறும்போது, சென்சார்

போர்டுமுற்றிலும் ஒரு சான்றிதழ் மட்டும் வழங்கும்விதமாக மாறும் எனக் கூறினார்.

சட்டம் நிறைவேற்றப்பட்டால் தணிக்கைக் குழுவில் ஏற்படும் மாற்றங்கள்:

1. உளவியலாளர்கள் உட்பட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் நியமிக்கும் இரண்டு உறுப்பினர்கள் தான் தணிக்கைக் குழுவில் இருக்க முடியும்.

2. படங்களுக்கு U, A, U/A என கொடுக்கப்பட்டு வரும் சான்றிதழ்கள் U12+, U15+, A + (தீவிர வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள்) என மாற்றப்படும்.

3. தணிக்கைக் குழு ஒரு நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது.

4. அவசர அனுமதிபெற விரும்பும் திரைப்படம் கூடுதல் கட்டணம் செலுத்தி 'தட்கல் ' பிரிவின் முறையில் பார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

5. சான்றிதழ் கொடுப்பதற்கு வாங்கப்படும் பணம் தொழிலாளர் அமைச்சகத்துக்குச் சென்றுவிடும். பிறகு, அங்கிருந்து திரைப்படத் துறையில் இருக்கும் தொழிலாளர்கள் நலனுக்கு பணம் அனுப்பப்படும்.

சீக்கிரம் கொண்டு வாங்க சார்!

English summary
Good news for the film makers. A change is going to come in censor board in connection with certifying movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil