என்ன சொல்றீங்க...அண்ணாச்சி படத்தில் மீண்டும் விவேக் நடிக்கிறாரா... எப்படி ?
சென்னை : சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.
பலரும் பாராட்டும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்ட விவேக்கின் மரணம் இயற்கை ஆர்வலர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்து வருகிறது. அவரது நினைவாக ஏராளமானோர் தற்போது வரை மரக்கன்றுகளை நட்டு, விவேக்கை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

விவேக் ரோலில் வேறு ஒருவர்
விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். சில படங்களில் நடித்துக் கொண்டும் இருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் விவேக் நடித்து வந்தார். ஆனால் வழக்கு காரணமாக இந்தியன் 2 வேலைகள் பாதியில் நிற்பதால், அதில் போலீஸ் கேரக்டரில் சில சீன்களில் நடித்த விவேக்கின் காட்சிகள் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் அந்த காட்சிகளை எடுக்க போவதாக ஷங்கர் கூறி இருந்தார்.

விவேக் ரோல் ரொம்ப முக்கியம்
ஆனால் விவேக் கடைசியாக நடித்துக் கொண்டிருந்த படங்களில் ஒன்று லெஜெண்ட் சரவணா நடிக்கும் பெயரிடப்படாத படம். ஜெடி ஜெர்ரி இந்த படத்தை இயக்கி வருகிறார். ஊர்வசி ரவுதேலா, பிரபு நடிக்கும் இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நண்பராக விவேக் நடித்து வந்தார். படத்தின் அனைத்து காட்சிகளிலும் விவேக்கின் கேரக்டர் வருவது போன்று தான் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படக்குழு செய்த ஐடியா
விவேக் மரணத்திற்கு பிறகு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் விவேக்கின் கேரக்டர் இல்லாமல் படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க படக்குழு புதிய ஐடியா மூலம் விவேக்கை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனராம்.

மீண்டும் நடிக்கும் விவேக்
இதைக் கேள்விப்பட்ட பலரும், விவேக் தான் உயிரிழந்து விட்டாரே அவர் எப்படி தற்போது நடக்கும் ஷுட்டிங்கில் மீண்டும் வந்து நடிக்க முடியும் என ஆச்சரியம் மற்றும் குழப்பத்துடன் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எப்படி விவேக் தற்போது நடிக்க உள்ளார் என்பதை படக்குழுவே விரிவாக விளக்கி உள்ளது.

இப்படி தான் நடிக்கிறாரா
அதாவது, விவேக்கை போன்றே அச்சு அசலாக உருவ அமைப்பு கொண்ட ஒருவரை இந்த ரோலில் நடிக்க தேர்வு செய்துள்ளார்களாம். இவரை வைத்து சில ஷுட் ட்ரிக்குகளை பயன்படுத்தி, விவேக் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்க போகிறார்களாம். பிறகு அவற்றை கம்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் இந்த காட்சிகளுடன் சரியாக பொருத்தி, விவேக்கை மீண்டும் திரையில் கொண்டு வர போகிறார்களாம்.

படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்
மீண்டும் விவேக் திரையில் தோன்றி, ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க உள்ளதை கேட்டு விவேக் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவேக்கின் உழைப்பை வீணாக்காமல், அதே சமயம் தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்தி மீண்டும் விவேக்கின் நடிப்பை பார்க்க வைக்க உள்ள படக்குழுவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
Recommended Video

ரிலீசாக போகும் விவேக் படங்கள்
இதே போல் விவேக் கடைசியாக விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர், சுந்தர்.சி.,யின் அரண்மனை 2 ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால் இந்த படங்களில் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகள், அவரது மரணத்திற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாம்.


Click it and Unblock the Notifications











