இனி மற்ற ஹீரோக்கள் ஃபீல்டு அவுட் தானா... மிரள வைக்கும் கமலின் அடுத்தடுங்க படங்கள் லிஸ்ட்

சென்னை : நடிகர் கமலஹாசன் தனது 7 வது வயது முதல் நடித்து வருகிறார்.60 வருட திரைப்பயணத்தில் தற்போது தான் முதல் முறையாக 4 வருடங்கள் பிரேக் எடுத்துள்ளார். அதுவும் அரசியல் காரணமாக.

இந்தியன் 2 படம் பாதியில் நின்றது, கொரோனா போன்ற காரணங்களால் கமலின் திரையுலக பயணத்தில் பிரேக் விழுந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து, அதையும் பிளாக் பஸ்டர் படமாக்கி விட்டனர்.

விக்ரம் ஒரு படத்திலேயே மொத்த கலெக்ஷனையும் அள்ளி விட்ட கமல், மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்களை கமல் வெளியிட்டு வருகிறார்.

கமலின் சொன்ன தகவல்

கமலின் சொன்ன தகவல்

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கமல், தான் அடுத்ததாக மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக கூறினார். விக்ரம் படத்தை போல் இதுவும் மல்டி ஸ்டார் படம் என்றே சொல்லப்படுகிறது. அது தேவர்மகன் 2 என்று கூட பலரும் கூறி வருகின்றனர்.

மிரள வைக்கும் லிஸ்ட்

மிரள வைக்கும் லிஸ்ட்

இந்நிலையில் கமல் அடுத்ததாக நடிக்க உள்ள படங்கள், அவர் பிளான் செய்திருக்கும் படங்கள் ஆகியவற்றின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். ஒரே சமயத்தில் இத்தனை படங்களிலா நடிக்கிறார் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

கமலின் அடுத்த படம்

கமலின் அடுத்த படம்

இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, கமல் அடுத்ததாக ஆண்டவர் 233 படத்தில் நடிக்க போகிறாராம். இதை முடித்த பிறகு தான் மகேஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறாராம்.

கமல் நடிக்க போகும் படங்கள்

கமல் நடிக்க போகும் படங்கள்

இதைத் தொடர்ந்து ஆண்டவர் 234, கமல் - இளையராஜா- பா.ரஞ்சித் இணையும் படம், ஆண்டவர் 235 (இந்தியன் 2) , கமல் - அனிருத்-ஷங்கர் படம், ஆண்டவர் 236, கமல் - ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் இணையும் படம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதற்கு இடையில் விக்ரம் 3, கைதி 2 படங்களிலும் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மத்தவங்க ஃபீல்டுஅவுட் தானா

மத்தவங்க ஃபீல்டுஅவுட் தானா

இந்த தகவலின் படி பார்த்தால், கமலிடம் தற்போது கைவசம் 10 படங்கள் உள்ளது. இந்த லிஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ஆச்சரிமாக, இவர் என்ன நான்கு வருடங்கள் நடிக்காததற்கும் சேர்த்து நடிக்கிறாரா. விக்ரம் ஹிட், வசூலுலை பார்த்தே அனைவரும் ஆடி போய் இருக்காங்க. இதுல இத்தனை படத்தையும் நடித்து வரிசையாக கமல் வெளியிட்டால் இருக்க மற்ற நடிகர்கள் அத்தனை பேரும் ஃபீல்டு அவுட் தான் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

KamalHaasan | நச்சுனு முத்தம் கொடுத்த கமல், உற்சாகத்தில் Robo Shankar | Filmibeat Tamil
ஆமாங்க...இதுவேற பண்ண போறார்

ஆமாங்க...இதுவேற பண்ண போறார்

வரிசையாக இத்தனை படங்கள் மட்டுமல்ல, வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை தொகுத்து வழங்க தான் நிச்சயம் வர போவதாக கமல் ஏற்கனவே அறிவித்து விட்டார். இனி அதற்கான ப்ரோமோ ஷுட், வார இறுதி நாட்கள் ஷுட் என அதையும் சேர்த்து செய்ய போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X