ஆர்யாவை அடுத்த இயக்கும் டைரக்டர் இவர் தான்... எகிறும் எதிர்பார்ப்பு

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீசானது. 1970 களில் நடப்பது போன்ற, பாக்சிங்கை மையமாகக் கொண்ட படம் தான் இது. இதில் கபிலனாக ஆர்யா நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மாரியம்மாள் கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். பாக்சிங் கற்றுத் தரும் ரங்கன் வாத்தியாராக பசுபதி நடித்திருப்பார்.

சமூக பிரச்சனை, அரசியல் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த படம், படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டு மழையில் நனைய வைத்து, புகழடைய வைத்து விட்டது. நடிகர்களின் நிஜப் பெயர்களை மறந்து கபிலன், மாரியம்மாள், வேம்புலி என கேரக்டர் பெயர்களே ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது.

கேரக்டர்களாக மாறிய நடிகர்கள்

கேரக்டர்களாக மாறிய நடிகர்கள்

மாரியம்மாள் மாதிரி பொண்ணும் வேணும்னு இளைஞர்கள் கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கேரக்டர்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றால் பாருங்களேன். அதே போல் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டால் படங்களின் வெற்றி பாதிக்கப்படும் என கூறப்பட்டு வந்த கூற்றையும் இந்த படம் உடைத்தெறிந்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட சார்பட்டா பரம்பரை பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சார்பட்டா பரம்பரையை பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு சார்பட்டா பரம்பரையுடன் தொடர்புடைய விஷயங்களை ட்ரோல் செய்து வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் கூட 1970 களில் வெளிவந்த பழைய படம் ஒன்றில், சார்பட்டா பரம்பரை பற்றி நாகேஷ் பேசுவது போன்ற வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கினர்.

அடுத்தடுத்த படங்களில் ஆர்யா

அடுத்தடுத்த படங்களில் ஆர்யா

சார்பட்டா பரம்பரையின் வெற்றி, பெண் குழந்தைக்கு தந்தையானது என இரட்டை சந்தோஷத்தில் இருக்கும் ஆர்யா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனிமி படத்தில் நடித்து முடித்துள்ள ஆர்யா, அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் காமெடி - பேய் படமான அரண்மனை 3 ல் நடித்து வருகிறார். தனது நெருங்கிய நண்பரான விஷால் ஹீரோவாக நடித்துள்ள எனிமி படத்தில் ஆர்யா தான் வில்லன்.

வெப் சீரிசில் நடிக்கிறார் ஆர்யா

வெப் சீரிசில் நடிக்கிறார் ஆர்யா

இதைத் தொடர்ந்து அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஆர்யா. மிலின் ராவ் இந்த வெப் சீரிசை இயக்க உள்ளாராம். இவர் தான் ஆண்டிரியா, சித்தார்த்த நடித்த அவள் என்ற பேய் படத்தை இயக்கியவர். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. சார்பட்டா பரம்பரையின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உருவாக போகும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளரான ஆர்யா

தயாரிப்பாளரான ஆர்யா

ஆர்யா படங்களில் பிஸியாக இருப்பதுடன் ப்ரொடக்ஷன் ஹவுஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். The Show People என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், மலையாளம் படங்கள் பலவற்றை ஆர்யா தயாரித்து வருகிறார். ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களை இந்நிறுவனம் தான் தயாரித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X