அடிதூள்... அனல் பறக்க வந்த தளபதி 66 அப்டேட்...பட்டாசு வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு அப்டேட்டா என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னது ஷுட்டிங் முடிஞ்சிடுச்சா
தளபதி 66 படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் பற்றி அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கும் முடிக்கப்பட்டு விட்டது என்ற ஆச்சரியத் தகவலும் வெளியாகி உள்ளது. அதோடு மூன்றாம் கட்ட ஷுட்டிங் நேற்று துவங்கி விட்டதாகவும், இது இரவு நேர ஷுட்டிங்காக நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே
முதல் கட்ட ஷுட்டிங் சென்னையில் மிக சில நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த வாரம் துவங்கியது. இது 20 நாட்கள் வரை நடக்கும் என கூறப்பட்ட நிலையில், இதையும் குறுகிய காலத்திலேயே முடித்து விட்டு, அடுத்தகட்ட ஷுட்டிங்கையும் துவக்கி உள்ளனர். பெரிய ஹைலைட்டாக தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக ரிலீஸ் தேதியையும் இப்போதே அறிவித்து விட்டனர்.

அட செம அப்டேட்டா இருக்கே
லேட்டஸ்ட் அப்டேட்டாக, தளபதி 66 படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளதாம். இதில் பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்து முடித்து விட்டாராம் இசையமைப்பாளர் தமான். விரைவில் தமன் இசையுடனான தளபதி 66 மோஷன் போஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள், ஷுட்டிங் துவங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே பாடல் இசையமைப்பு வேலைகளை முடித்து விட்டாரா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

அப்போ தரமா இருக்கும்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தளபதி 66 படத்திற்கு இசையமைப்பது பற்றி பேசிய தமன், முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறேன். என்னுடைய மிகச் சிறந்த மியூசிக் ஆல்பமாக தளபதி 66 இருக்கும். என்னும் மொத்த திறமையையும் இதில் காட்டி, விஜய்க்காக ஸ்பெஷலான இசையை உருவாக்கி உள்ளேன் என்றார். இதனால் தளபதி 66 பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











