»   »  அடையாளங்கள் இருக்கா, இல்லையா?: தனுஷின் மருத்துவ அறிக்கையின் முழு விபரம் இதோ

அடையாளங்கள் இருக்கா, இல்லையா?: தனுஷின் மருத்துவ அறிக்கையின் முழு விபரம் இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் முழு விபரம் தெரிய வந்துள்ளது.

தனுஷ் தங்கள் மகன் என்று திருப்புவனம் தம்பதி தொடர்ந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாகிய நான் டாக்டர் எம்.ஆர். வைரமுத்து ராஜு எம்.டி., மதுரை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் எம்.டி.யும் நீதிமன்ற பதிவாளர் அறைக்கு சென்றோம்.

அப்போது அந்த அறையில் மிஸ்டர் தனுஷ் இருந்தார். அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பதிவாளர் அவரை பிரசோதனை செய்யுமாறு கூறினார்.

அந்த அறையில் ஆபீஸ் உதவியாளர் சோமு, ஆண் நர்சிங் உதவியாளர் சுரேஷ் ஆகியோரும் இருந்தனர். பதிவாளர் முன்னிலையில் அவரது அறையில் காலை 11.20 மணிக்கு தனுஷை பரிசோதனை செய்தோம். பரிசோதனை முடிவின் விபரம்,

மச்சம்

மச்சம்

இடது கழுத்து எலும்பின் மேல் பகுதியில் மச்சம் எதுவும் இல்லை. அதேபோல, இடது முன்னங்கையில் எந்த காயத்தழும்பும் இல்லை.

அகற்றலாம்

அகற்றலாம்

தோலின் மேல் பரப்பில் உள்ள சிறிய மச்சங்களை அகற்றிவிடலாம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காயத் தழும்புகளை அகற்ற இயலாது. இந்த சிகிச்சை முறையில் காயத் தழும்பின் அளவைக் குறைக்கலாம்.

தழும்பு

தழும்பு

தோலின் மேல் பகுதியில் இருந்த சிறிய மச்சம் லேசர் சிகிச்சை மூலம் தடயம் இன்றி அழிக்கப்பட்டுள்ளது. பெரிய மச்சம் அகற்றப்பட்டிருந்தால், அதன் தடயத்தை டெர்மாஸ்கோப் மூலம் காண முடியும். ஒரு தழும்பை இப்போதுள்ள நவீன பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பத்தால் அகற்ற முடியாது. ஆனால் அதன் அளவைக் குறைக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிரேசன்

திருப்புவனம் தம்பதி தெரிவித்ததன்படி தனுஷின் இடது கழுத்து எலும்பின் மேல் பகுதியில் மச்சமோ, இடது முன்னங்கையில் தழும்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The medical statement submitted in Dhanush's paternity case said that the identifications claimed by Thiruppuvanam couple are not there on the actor's body.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil