»   »  ஐஸ்வர்யா, ஜெயாவை நினைத்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சன்

ஐஸ்வர்யா, ஜெயாவை நினைத்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன் வீட்டு பெண்கள் இரவில் வெளியே சென்றால் அவர் வீடு திரும்பும் வரை தூங்காமல் இருப்பாராம் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் இதுவரை ரூ. 32.67 கோடி வசூல் செய்துள்ளது.

Here's How Aishwarya, Jaya Bachchan Keep Amitabh Awake All Night

3 பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிங்க் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்நிலையில் அமிதாப் பச்சன் படம் மற்றும் பெண்கள் பற்றி கூறுகையில்,

73 வயதில் என்னுடன் வேலை செய்ய இயக்குனர்கள் விரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் பெண்களின் நிலையை நினைத்து கவலையாக உள்ளது.

என் வீட்டு பெண்கள் யாராவது இரவில் வெளியே சென்றால் எனக்கு ஒரே கவலையாக இருக்கும். அவர்கள் செல்லும்போதே எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்பேன். பின்னர் அவர்கள் வீடு திரும்பும் வரை தூங்காமல் காத்திருப்பேன் என்றார்.

English summary
Bollywood actor Amitabh Bachchan said that when female members of his family go out, he would stay awake till they come back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil