என்னது வெண்பாவுக்கு முடிவே கிடையாதா.. அப்ப பாரதி கண்ணம்மா.. கதறும் ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக உள்ள பாரதி கண்ணம்மா தொடர் ஆயிரம் எபிசோட்களை நோக்கி நடைபோட்டு வருகிறது.

இந்தத் தொடர் நீண்ட நாட்களாக இழுத்து வருவதால் தொடருக்கு விரைவில் என்ட் கார்ட் போட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

ஆனால் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தொடரே முடிந்துவிடும் என்றபோதிலும் இழுவையாக இழுத்து வருகிறார் இயக்குநர்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக உள்ள பாரதி கண்ணம்மா ரசிகர்களின் பேவரைட் தொடராகத்தான் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால் இந்தத் தொடரின் ரோஷினி உள்ளிட்ட நடிகர்களின் மாற்றம் மற்றும் சீரியலின் ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் தொடருக்கான வரவேற்பை குறைத்தது.

அரைத்த மாவையே அரைக்கும் தொடர்

அரைத்த மாவையே அரைக்கும் தொடர்

கணவன் -மனைவி இடையிலான சந்தேகம், அதையடுத்த அவர்களின் பிரிவு, அவர்களின் குழந்தைகள், வில்லியின் செயல்பாடுகள் இதை மட்டுமே வைத்துக் கொண்டு தொடர்ந்து சீரியலை ஓட்டிவிடலாம் என்ற இயக்குநரின் கணிப்பு ஒரு கட்டத்தில் ரசிகர்களை மிகவும் அதிருப்தி கொள்ள செய்தது. இது டிஆர்பியிலும் எதிரொலித்தது.

 சீரியல் எப்போ முடியும்?

சீரியல் எப்போ முடியும்?

இதையடுத்து தீவிரவாதிகள், ஹீரோவின் தந்தைக்கு கேன்சர், வில்லியின் அச்சுறுத்தல், வில்லியை திருமணம் செய்ய ஹீரோ ஒப்புதல் என எதையெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறார் இயக்குநர். ஆனால் இந்தத் தொடரின் நடிகர்கள் எப்போது சமூக வலைதளப்பக்கங்களின் லைவில் வந்தாலும் சீரியல் எப்போது முடியும் என்றே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வில்லி வெண்பாவின் பதில்

வில்லி வெண்பாவின் பதில்

இதனிடையே இதுபோன்ற ஒரு இன்ஸ்டாகிராம் லைவில் வந்த பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பாவிடம், அவரது கேரக்டருக்கு எப்போதுதான் என்டிங் என்று கேட்கப்பட்டது. அவர் அதற்கு கூலாக வெண்பாவிற்கு என்டிங்கே இல்லை என்று பதிலளித்துள்ளார். அப்படியானால் சீரியலுக்கும் என்ட் கார்ட் கிடையாதா என்று ரசிகர்கள் அலறி வருகின்றனர்.

வெண்பாவை திருமணம் செய்ய பாரதி சம்மதம்

வெண்பாவை திருமணம் செய்ய பாரதி சம்மதம்

தன்னுடைய கர்ப்பத்தை காட்டி, தன்னை திருமணம் செய்யுமாறு பாரதியை அச்சுறுத்தும் வகையில் விஷம் சாப்பிட்டார் வெண்பா. இதையடுத்து அவரது உயிரைக் காப்பாற்றும் வகையில், பாரதியும் வெண்பாவை திருமணம் செய்ய வேண்டாவெறுப்பாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நீளும் சீரியல்?

மீண்டும் நீளும் சீரியல்?

தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மா காப்பாற்றியதை அடுத்து தன்னுடைய அம்மா கேட்டு கொண்டதையடுத்து மீண்டும் அவருடன் இணைய பாரதி விரும்பிய நிலையில், வெண்பாவின் வில்லத்தனம் மீண்டும் தலையெடுக்க அவரை திருமணம் செய்ய தற்போது பாரதி ஓகே சொல்லியுள்ளார். இதை வைத்து சீரியல் நீளும் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X