»   »  உடைஞ்சது உடைஞ்சதுதான்... இனி ஒன்றுசேரவே முடியாது!- சரத்குமார்

உடைஞ்சது உடைஞ்சதுதான்... இனி ஒன்றுசேரவே முடியாது!- சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்துக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இனி நாம் ஒட்டவே முடியாது என நடிகர் சரத்குமார் கூறினார்.

நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த தங்கள் ஆதரவாளர் கூட்டத்தில் நீண்ட நேரம் பேசிய சரத்குமார், பல முறை உணர்ச்சி வசப்பட்டார்.

Hereafter no friendly relationship with Vishal team, says Sarathkumar

தன்னைப் பற்றி மனைவி ராதிகாவிடம் சிவகுமார் புகார் சொன்னதாகக்கூறி, 'ஆம்பளயா இருந்தா எங்கிட்ட கேளு.. என் மனைவிகிட்ட, ஒரு பொம்பள கிட்ட எதுக்கு கேக்கிற?' என்றார்.

அதேபோல பாலச்சந்தர் மறைவுக்குக் கூட வர மனசில்லாதவர்தான் கமல் ஹாஸன் என்றார்.

இறுதியில், "நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ பாடுபட்டேன். என்னை நோகடித்து, அவமானப்படுத்தி விட்டார்கள். சங்கத்துக்குள் பெரிய பிளவு ஏற்பட்டுவிட்டது. உடைஞ்சது உடைஞ்சதுதான். இனி ஒட்ட வைக்க முடியாது. இந்த பிளவு தேர்தலுக்குப் பிறகும் கூடத் தொடரும்," என்றார்.

English summary
Actor Sarath Kumar says that the Nadigar Sangam has divided with bitter happenings and there is no chance to join together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil