»   »  தோல்வி இயக்குநர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் ஹீரோக்கள்!

தோல்வி இயக்குநர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தோல்வி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள்..

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடத்திலுமே முதல் முயற்சியில் தோற்றால் போதும். அடுத்தடுத்து வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான். சினிமாவில் முதல் படம் தோற்றால் மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்.

ஆனால் சமீபகாலமாக தோல்விப்படம் கொடுத்த இயக்குநர்களைக் கூட ஹீரோக்கள் அழைக்கிறார்கள். விஷால் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து படம் பண்ணப்போகிறார். ஆதிக் ஏஏஏ என்று ஒரு படுதோல்விப் படத்தைத் தந்த இயக்குநர்.

Heroes giving chance to even flop directors

ஜீவா அடுத்து கொரில்லா என்ற படத்தில் நடிக்கிறார். அந்த இயக்குநர் மகாபலிபுரம் என்னும் படத்தை இயக்கியவர். பிரபுதேவாவின் சமீபத்திய படமான குலேபகாவலியை இயக்கியது கல்யாண். இவர் அழகு குட்டி செல்லம் என்ற படத்தை இயக்கியவர்.

எப்படிப்பட்ட படம் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை. ஒரு படமாவது எடுத்த இயக்குநர்களை அழைக்கிறார்கள். இதனால் புதுமுக இயக்குநர்கள் வேறு வழியே இல்லாமல் ஏதாவது ஒரு மோசமான படத்தை இயக்கி தனக்கு இயக்கம் வரும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

English summary
Tamil heroes are looking directors with atleast one film experience but dont bother about its Box Office status

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil