»   »  சூப்பர் ஸ்டார் பட்டமா.... வேணாம் சாமி! அலறும் ஹீரோக்கள்!!

சூப்பர் ஸ்டார் பட்டமா.... வேணாம் சாமி! அலறும் ஹீரோக்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடக்கூட இடத்தை தொட்டால் படக்கூடாத வேதனையை பட வேண்டும் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோக்கள்.

எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இன்று இருக்கும் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட நிச்சயம் ரஜினி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ரஜினி நடிப்பதை கொஞ்சம் குறைத்துக்கொண்டதால் பிற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக மாறி இருப்பார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்த ரஜினி ரசிகன் இருந்துகொண்டேதான் இருப்பான். இந்த உளவியலால்தான் 'நான் ரஜினி ரசிகன்' என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு பின்னால் கூட்டம் கூடுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் முதல் லாரன்ஸ் வரை அப்படித்தான். ஆனால் அந்த பொன்முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்தால்?

Heroes say No to Superstar title

ஆமாம்... ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆசைப்பட்டால்... சும்மா விட்டுவிடுவார்களா? லாரன்ஸ் கதிதான். மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை லாரன்ஸ் போட்டுக்கொள்ள சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தியேட்டர்களிலும் கழுவி ஊற்றப்பட்டார். ஒரு படம் டைட்டில் கார்டிலேயே தோல்விப் படமான வரலாற்று சம்பவத்துக்கு காரணமானது லாரன்ஸின் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம். இப்போது லாரன்ஸ் மட்டுமல்ல அனைத்து ஹீரோக்களுமே நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருப்பார்கள்.

'ரஜினிக்கு இருப்பதெல்லாம் வயதான ரசிகர்கள்... அவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் பரிச்சயம் இருக்காது' என்று நினைத்தவர்களுக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். ரசிகர்களைத் தாண்டி பொதுவான இளைஞர்கள் லாரன்ஸை காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.

இதையெல்லாம் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட மற்ற நடிகர்கள், இப்போது 'அந்தப் பட்டமே வேணாம்டா சாமி' என்று அலறுகிறார்களாம்!

English summary
Top heroes who are all want to use super star title before their name, now scared to use the same after seen Lawrence issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil