»   »  அந்த சீனியர் ஹீரோவுக்கு ஜோடியா, ஆளவிடுங்க சாமி: தெறித்து ஓடும் நடிகைகள்

அந்த சீனியர் ஹீரோவுக்கு ஜோடியா, ஆளவிடுங்க சாமி: தெறித்து ஓடும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சீனியர் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

மலையாள திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் ஜெயராம். குடும்ப பாங்கான படங்களில் நடித்து பல குடும்பங்களுக்கு பிடித்த ஹீரோவாக உள்ளவர். ஆனால் தற்போது அவரது சினிமா வாழ்க்கையில் லைட்டா தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவர் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

மல்லுவுட்டின் முன்னணி நடிகைகள் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க தயாராக இல்லையாம். ஹீரோயின்கள் நடிக்க மறுப்பதால் ஜெயராம் படங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

பெரும்பாலான நடிகைகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஜெயராமுடன் நடிக்க மறுக்கிறார்கள். ஆனால் சிலரோ ஜெயராம் தான் ஹீரோ என்றால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

ஆடுபுலியாட்டம்

ஆடுபுலியாட்டம்

ஆடுபுலியாட்டம் படத்தில் ஜெயராமுடன் நடிக்க ஜுவல் மேரி மறுத்தார். கதை பிடிக்காததால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றார் மேரி. ஆனால் தயாரிப்பாளர்களோ, ஜெயராம் ஹீரோ என்பதால் தான் மேரி நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மியா ஜார்ஜ்

மியா ஜார்ஜ்

ஆடுபுலியாட்டம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மியா ஜார்ஜ், ஹனி ரோஸ் ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் தான் அந்த படத்தின் நாயகியாக ஷீலு ஆபிரகாம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திரும்பி வருவார்

திரும்பி வருவார்

நான்கு ஆண்டுகளாக ஜெயராம் ஹிட் கொடுக்காவிட்டாலும் நிச்சயம் மீண்டு வந்து வெற்றிப் படங்களை அளிப்பார் என்று நம்பப்படுகிறது.

    English summary
    Jayaram, the family hero of Mollywood, is going through a low phase in his career. As per the latest updates, the leading heroines are not ready to work with the actor.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil