»   »  " 'அருவி' படத்தில் நடிக்க தயங்கிய ஹீரோயின்கள்..." - உண்மையை போட்டு உடைத்த தயாரிப்பாளர்!

" 'அருவி' படத்தில் நடிக்க தயங்கிய ஹீரோயின்கள்..." - உண்மையை போட்டு உடைத்த தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் படம் 'அருவி'. அருண் பிரபு புருஷோத்தமன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

விமர்சகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்றுவரும் 'அருவி' படத்தில் அதீதி பாலன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வேதாந்த் இசை அமைத்துள்ளார், ஷெல்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'அருவி' படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசினார்.

மிகச்சிறந்த படம்

மிகச்சிறந்த படம்

"இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும்தான் என்னால் கூற முடிந்தது.

அருவி

அருவி

என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வகையில் உருவாகி இருக்கும் படம் தான் இந்த 'அருவி'.

கடுமையான உழைப்பில்

கடுமையான உழைப்பில்

படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.

 ஷங்கர் போல மெனக்கெடல்

ஷங்கர் போல மெனக்கெடல்

இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருண் பிரபு புருஷோத்தமனும் அவருடைய குழுவினரும் அருவி படத்துக்காக கடுமையாக உழைத்தனர்.

நடிக்க மறுத்த ஹீரோயின்கள்

நடிக்க மறுத்த ஹீரோயின்கள்

அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் ஏனோ நடிக்கத் தயங்கினார்கள். அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 500 பெண்களை இயக்குநர் ஆடிஷன் செய்தார்." எனக் கூறினார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

English summary
'Aruvi' movie produced by Dream Warrior Pictures. Arun Prabhu Purusothaman has directed this movie. In the film 'Aruvi', Aditi Balan is acting as heroine. "In the heroine role of Aruvi, we were initially negotiating with two leading heroines and they were reluctant to act, so we decided that we could go back to newcomers," said producer SR Prabhu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil