»   »  ஏம்மா சுசித்ரா, இதென்ன சரவணபவன் மெனுவா? டெய்லி ஒண்ணு எழுதி ரிலீஸ் பண்ற ஐட்டமா?

ஏம்மா சுசித்ரா, இதென்ன சரவணபவன் மெனுவா? டெய்லி ஒண்ணு எழுதி ரிலீஸ் பண்ற ஐட்டமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடகி சுசித்ராயின் ட்விட்டர் பதிவுகள் தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் நடக்கிற எல்லாமே பெரிய குழப்பமாக உள்ளது.

முதலில் தனுஷ் ஆட்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டி, அதுகுறித்த படங்களையும் வெளியிட்டார் சுசித்ரா. ஆனால் அடுத்த நாளே அவற்றை நீக்கினார். பின்னர் மீண்டும் பதிவேற்றினார்.

Hey Suchithra, Is this Saravana Bhavan Menu card?

பின்னர் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியதோடு, அதை முடக்கக் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இன்னொரு பக்கம், அவரது கணவர் நடிகர் கார்த்திக், 'சுசித்ரா மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளார். அதனால் சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம். அவருக்கு யாருடனும் தனிப்பட்ட பகையெதுவும் இல்லை, உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் பதிவு செய்யப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்," என்று பூசி மெழுகி ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

அதே நேரம், இந்த மறுப்புகள், விளக்கங்கள் எதைப் பற்றியும் கவலையின்றி, சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பலரும் ஆவலுடன் சுசித்ரா பக்கத்தில் அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு ட்வீட் இன்று வெளியாகியுள்ளது.

அதில், நிகழ்ச்சி நிரலில் ஒரு மாற்றம்...

'ஞாயிற்றுக் கிழமை - சின்மயி & அனிருத்
திங்கள்கிழமை - தனுஷ் & அமலா பால் வீடியோ
செவ்வாய்க்கிழமை - தனுஷ் & பார்வதி நாயர்...

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஜோடிகளின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவேன் என்பதைத்தான் சுசித்ராவின் பக்கம் சொல்கிறது.

இதைக் கண்ட சந்திரசேகரன் என்ற பேஸ்புக் பதிவர், "ஏன்மா இது என்ன சரவணபவன் மெனுவா ? .. டெய்லி ஒன்னு போர்டுல எழுதி ரிலீஸ் பண்ற ஐட்டமா இதல்லாம் 😢" என்று கிண்டலடித்துள்ளார்.

Hey Suchithra, Is this Saravana Bhavan Menu card?
English summary
In Suchithra's deactivated Twitter page, there was a tweet that scheduled the release date of Dhanush, Parvathi Nair, Amala Paul, Anirudh & Chinmayi private pictures

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil