»   »  ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் மேற்பார்வையில் அனல் பறக்கும் தெறி சண்டைக் காட்சி!

ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் மேற்பார்வையில் அனல் பறக்கும் தெறி சண்டைக் காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்துவிட்டது. அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்தான் பாக்கி.

அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றன.


சண்டைக் காட்சி

சண்டைக் காட்சி

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கியுள்ளனர். கலயோன் என்ற ஸ்டண்ட் இயக்குநர்தான் இந்தக் காட்சியைப் படமாக்கினார். இவர் பாகுபலி, மிஷன் இம்பாஸிபிள் 5 போன்ற படங்களில் பணியாற்றியவர்.


ஹாலிவுட் கலைஞர்கள்

ஹாலிவுட் கலைஞர்கள்

இவர் தவரி ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் பலரும் இப்படத்தில் பங்கேற்றது படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


திலீப் சுப்பராயன்

திலீப் சுப்பராயன்

க்ளைமாக்ஸில் இடம்பெறும் இந்த சண்டைக் காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளதாக இயக்குநர் அட்லி திருப்தி தெரிவித்தார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.


மகேந்திரன்

மகேந்திரன்

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், பழம் பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


English summary
A high-octane climax stunt sequence in Vijay’s Theri was shot recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil