»   »  22 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்யும் கமல் பட இசையமைப்பாளர்

22 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்யும் கமல் பட இசையமைப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிமேஷ் ரேஷமையா திருமணமாகி 22 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவியை விவாகரத்து செய்கிறார்.

பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ளவர் ஹிமேஷ் ரேஷமய்யா. அவர் தனது 21வது வயதில் கோமல் என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார்.

Himesh Reshammiya part ways with wife

திருமணமாகி 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தானும், கோமலும் பிரிந்து செல்வது என கலந்து பேசி முடிவு செய்ததாக ஹிமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு டிவி நடிகை சோனியா கபூருக்கும், ஹிமேஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக பேச்சாகக் கிடந்தது.

பிரிந்தாலும் மகன் விஷயத்தில் தாங்கள் இருவரும் கலந்தாலோசித்தே எந்த முடிவும் எடுப்போம் என கோமலும், ஹிமேஷும் தெரிவித்துள்ளனர். ஹிமேஷ் உலக நாயகன் கமல் ஹாஸனின் தசாவதாரம் படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood musician Himesh Reshammiya and his wife of 22 years Komal have parted their ways.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil