twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னடா வசனமே புரியல.. இந்தியில் சப்டைட்டில் போடுங்கஜி.. தி ஃபேமிலி மேன் 2வை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!

    |

    சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை அதிகம் எதிர்பார்த்த பாலிவுட் ரசிகர்களை இயக்குநர்கள் நல்லா வச்சு செய்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

    Recommended Video

    தமிழகத்தில் எதிர்ப்பு The Family man 2 ஏன் தெரியுமா? | Oneindia Tamil

    இந்த வெப் தொடரை தமிழில் டப் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும், மாறாக இந்தியில் தான் டப் செய்ய வேண்டும் என ட்ரோல்கள் பறக்கின்றன.

    முதல் சீசனில் பாகிஸ்தான் பிரச்சனையை பேசிய தி ஃபேமிலி மேன் 2 அப்படியே யூ டர்ன் அடித்து இந்த முறை ஈழத் தமிழர்கள் பிரச்சனையை கையிலெடுத்து சர்ச்சைகளை கிளப்பி காசு பார்க்க முயற்சித்துள்ளது. இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே என ஒற்றை ஸ்லைட் போட்டு விட்டால் போதும்.

    பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா

    பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா

    ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா.. தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் எப்போ சார் வரும் என அமேசான் பிரைமையும் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் படக்குழுவினரையும் தொடர் ரிலீசான உடனே தென்னிந்திய ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கி விட்டனர். மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்வதாக அறிவித்து விட்டு, கடைசியில் இந்தியில் மட்டும் வெளியிட்டது தான் இந்த பிரச்சனைக்கான காரணம்.

    என்னடா வசனமே புரியல

    என்னடா வசனமே புரியல

    ஆனால், வெப் தொடரை பார்க்க ஆரம்பித்த இந்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தொடர் ஆரம்பித்ததே தமிழ் மொழியில் தான். மேலும், இலங்கை மற்றும் சென்னையிலேயே பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்று இருந்ததால், வெப் தொடர் முழுக்க தமிழ் மற்றும் ஆங்கிலமே நிறைந்திருக்கிறது. இந்தி கொஞ்ச நேரம் மட்டுமே எட்டிப் பார்க்கிறது.

    நல்லா கத விடுற மேன் நீ

    நல்லா கத விடுற மேன் நீ

    நாளிதழ்களில் படித்த செய்திகளை வைத்துக் கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளோம் என சொல்லிக் கொண்டு, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையையும், இந்தியா - இலங்கை பிரச்சனையையும் கையில் எடுத்துக் கொண்டு ஈழத் தமிழர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சூழ்ச்சி செய்து தங்களின் மிஷன் ஸுல்ஃபிகர் 2வை இந்தியாவில் நடத்துவது போல இஷ்டத்துக்கு கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விட்டு, இனப் பற்றாளர்களை கடுப்பாக்கி உள்ளனர்.

    பிளான் பண்ணி

    பிளான் பண்ணி

    அனைத்து விதமான டப்பிங் பணிகளும் முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த வெப் தொடரை விடாததற்கு காரணமே, இந்தி வெப் தொடரை நிச்சயம் தென்னிந்தியர்கள் அதிகளவில் பார்த்து விட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்கிற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தியில் சப்டைட்டில்

    இந்தியில் சப்டைட்டில்

    தமிழ் மற்றும் ஆங்கிலத்திலேயே முழுக்க முழுக்க இந்த வெப் தொடர் பயணிப்பதை பார்த்த இந்தி ரசிகர்கள், இந்தியில் சப்டைட்டில் அல்லது ஒரு முறை இந்தியில் டப் செய்து வெளியிடுங்க என்கிற கோரிக்கையை இந்த வெப் தொடரின் தயாரிப்பாளர்கள் மத்தியில் காரசாரமாக வைத்து வருகின்றனர்.

    கண்ணு வலிக்குது

    கண்ணு வலிக்குது

    முதல் முறை இந்தி ரசிகர்களை வார்த்தைக்கு வார்த்தை கீழே குனிந்து சப்டைட்டிலை பார்த்து புரிந்து கொள்ளும் படி இந்த வெப் தொடரை எடுத்து வைத்துள்ளனர் என்றும், தமிழ் படங்களில் முன்னாடியே, வெளிநாட்டுக்காரங்கலாம் தமிழ்ல பேசுவாங்கன்னு சொல்வது போல சொல்லிவிட்டு ஈழத் தமிழர்களையும் இந்தியில் பேச வைத்து எடுத்து இருக்கலாம் என்பது இந்திவாலாக்களின் நிலைமையாக மாறிவிட்டது.

    English summary
    Hindi audience troll The Family Man 2 webseries for so many Tamil and English dialogues in all the episodes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X