»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஹிந்தித் திரைப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜிக்கு 1999-ம் ஆண்டுக்கானதாதாசாஹிப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டிஅவருக்கு இவ் விருது வழங்கப்படுகிறது. தங்கப் பதக்கம், ரூ. 2 லட்சம் பணமுடிப்புஆகியவை கொண்டது இந்த விருது.

செப்டம்பர் 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும்விழாவில் இவ் விருதை ரிஷிகேஷ் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வழங்குவார்.

நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் லேப் அஸிஸ்டெண்டாக தனது சினிமாவாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் திரைப்பட எடிட்டரானார். 1950-ம்ஆண்டுதான் அவர் ததாப்தி என்ற படத்தில் முழுமையான எடிட்டராகப்பணியாற்றினார்.

பின்னர் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு சிறந்த இயக்குநராக உயர்ந்தார். முதன்முதலாக 1957-ம் ஆண்டு முசாஃபிர் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்துக்குதேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அனாரி, அனுராதா, அனுபமா, ஆனந்த், குட்டி, அபிமான், நமக் ஹராம், சுப்கேசுப்கே, மிலி, நோக்ரி, கோல்மால், கூப்சூரத், ஹம் ஹிந்துஸ்தானி, தலாஷ் உள்ளிட்டவெற்றிப் படங்களை இயக்கினார்.

பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ள ரிஷிகேஷ் முகர்ஜி மத்திய திரைப்படசான்றிதழ் வாரியம், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகப்பணியாற்றி உள்ளார்.

யு.என்.ஐ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil