»   »  கணவனுடன் மனைவிகள் டான்ஸ் ஆடுவது தப்பு.. பாலிவுட் படத்துக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு!

கணவனுடன் மனைவிகள் டான்ஸ் ஆடுவது தப்பு.. பாலிவுட் படத்துக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாஜிரோ மஸ்தானி' திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிக்கு இந்து அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹிந்தி திரைப்படம் பாஜிரோ மஸ்தானி. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா நடித்திருக்கும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Hindu Janajagruti Samiti Warns Bajirao Mastani

இதில் ரன்வீர் சிங்கின் முதல் மனைவியாக பிரியங்கா சோப்ராவும், 2 வது மனைவியாக தீபிகா
படுகோனேவும் நடித்திருக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு தற்போது இந்து ஜனஜாக்ருதி என்ற இந்து அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது.

இந்து ஜன ஜாக்ருதி அமைப்பை சேர்ந்த ரமேஷ் ஷிண்டே கூறுகையில், "இந்தப் படத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் மனைவியாக வரும் மஸ்தானி மற்றும் காசிபாய் ஆகிய இருவரும் தங்கள் கணவருடன் இணைந்து ஆடிப் பாடுகின்றனர்.

ஆனால் பீஷ்வாக்களின் காலத்தில் பெண்கள் தங்கள் குடும்ப அமைப்புகளுக்கு மிகவும் கட்டுப்பட்டு
இருந்தனர். இப்படி கணவரோடு ஆடிப்பாடும் பழக்கம் கிடையாது. இந்தப் படம் வரலாற்றுக்கு மாறாக இருக்கிறது அதனால் நாங்கள் இந்தப் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.

English summary
Ranveer Singh, Deepika Padukone, Priyanka Chopra Starrer Bajirao Mastani Released on Next Month. Now Hindu Janajagruti Samiti Warns of Stir Against this Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil