'ஹிப் ஹாப்' ஆதிக்கும் சத்யம் தியேட்டருக்கும் இப்படியொரு கனெக்‌ஷனா.. விழாவில் நெகிழ்ச்சி!

By Vignesh Selvaraj

Recommended Video

ஹிப் ஹாப் ஆதிக்கும் சத்யம் தியேட்டருக்கும் இவ்ளோ தொடர்பா

சென்னை : 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்து ஹிட்டான படம் 'மீசைய முறுக்கு'.

'மீசைய முறுக்கு' படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. யூ-ட்யூபில் பல சாதனைகளைப் புரிந்தன இப்படத்தின் பாடல்கள்.

150 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்திருக்கிறது 'மீசைய முறுக்கு' ஆல்பம். அந்த வெற்றிக்குக் காரணமான இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விழா சென்னை சத்யம் சினிமாஸில் நேற்று நடைபெற்றது.

மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு

ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஆத்மிகா, ஆகியோர் நடித்த 'மீசைய முறுக்கு' படத்தை குஷ்பு, சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நிஜக்கதையில் உருவான இந்தப் படத்தை அவரே இயக்கினார்.

மீசைய முறுக்கு வெற்றி விழா

மீசைய முறுக்கு வெற்றி விழா

'மீசைய முறுக்கு' ஆல்பம் வெற்றி விழாவில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஷ்பு பேச்சு

குஷ்பு பேச்சு

விழாவில் குஷ்பு பேசுகையில், "ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். என் கணவர் சுந்தர் சி 'கலகலப்பு 2' சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை." எனக் கூறினார்.

இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன்

இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன்

மேலும் பேசிய குஷ்பு, "ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம்பி கடுமையாக உழைத்த ஆதியையே இந்தப் பெருமை சேரும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக ஆதி இருக்கிறார்" என்றார்.

ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் ஆதி

விழாவில் பேசிய ஆதி, "சத்யம் தியேட்டர்னா எல்லோருக்கும் அவங்க பார்த்த திரைப்படங்கள் தான் நினைவுக்கு வரும்; எங்களுக்கு எங்க வாழ்க்கையில் ஏற்பட்ட பல திருப்பங்கள் நினைவுக்கு வரும். ஏன்னா, முதன்முதலில் 'ஹிப் ஹிப் தமிழா' ஆல்பம் 2012-ல் இங்கதான் லாஞ்ச் ஆச்சு.

ஆம்பள இசை வெளியீட்டு விழா

ஆம்பள இசை வெளியீட்டு விழா

அடுத்து நான் இசையமைத்த 'ஆம்பள' படத்தோட இசை வெளியீட்டு விழா இதே சத்யம் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. அதையும் திங்க் மியூசிக் நிறுவனம் தான் வெளியிட்டாங்க. அதுக்கு அப்புறம், இப்போ 'மீசைய முறுக்கு' ஆல்பம் வெற்றி விழாவும் இங்கதான் நடக்குது.

ஆரம்பிச்ச இடத்திலேயே நன்றி

ஆரம்பிச்ச இடத்திலேயே நன்றி

இசையமைப்பாளரா சத்யம் தியேட்டரில் காலெடுத்து வச்சு, இயக்கம், எழுத்து, இசை, ஹீரோனு எல்லாம் சேர்ந்து பண்ணினதுக்கு அப்புறம், இப்போ பாடல்களின் 150 ஸ்ட்ரீம்ஸ் சாதனையைக் கொண்டாட இங்க வந்துருக்கோம். எங்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்த ரசிகர்களுக்கு ஆரம்பிச்ச இடத்துலயே நன்றி சொல்லிக்கிறோம்' என்று கூறினார் ஆதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X