Don't Miss!
- Technology
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
- Lifestyle
உங்க உடலில் இந்த பாகங்களில் பிரச்சினை இருந்தால் உங்க இதயம் பலவீனமா இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- News
கடப்பாரை நான் எடுத்து வரவா? நீ என்ன வேலை செய்ற? அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மஸ்தான்!
- Sports
ஹர்திக் பாண்டியா செய்த மிகப் பெரிய தவறு.. தீபக் ஹூடாவை நடத்திய விதத்தை கவனிச்சீங்களா? வாய்ப்பு மிஸ்
- Automobiles
சிஇஓ உடன் லடாய்! ஃபோக்ஸ்வேகன் தலைமை டிசைனர் டிஸ்மிஸ்! ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா?
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'பி. டி. சார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே, கணேஷ் பேசுகையில், '' ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவில் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். இந்த படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பி. டி. சாரை அனைவருக்கும் பிடிக்கும். இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தை பெறவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி, அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார்" என்றார்.

நடிகர் ஆதி பேசுகையில், '' கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை விழா.. என எந்த விழாவையும் நடத்தலாம். ஆனால் முதன்முறையாக தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா, கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. இன்றைய சூழலில் பண்டிகைகளை மக்கள் விசேஷமாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் பொங்கல் விழாவை, ஒரு திருவிழா போல் கொண்டாடுவது, தமிழ் உணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது போல் இருக்கிறது. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கும், அதனுடன் தொடர்புடைய திருவிழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவதை வெகுவாக பாராட்டுகிறேன். நீங்களும் கலந்துகொண்டு இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள். தீபாவளியை விட உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டிய திருவிழா பொங்கல் திருவிழா. 'பி டி சார்' படத்தை தற்போது தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் கழித்து திரைக்கு வரும். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல் 'பி டி சார்' படத்திற்கும் வழங்குவீர்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கிறேன் '' என்றார்.