»   »  ஹீரோ ஆசை யாரை விட்டது?.. ஹிப்ஹாப் ஆதியும் களத்தில் குதிக்கிறார்

ஹீரோ ஆசை யாரை விட்டது?.. ஹிப்ஹாப் ஆதியும் களத்தில் குதிக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி விரைவில் நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆம்பள' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதி. கடந்தாண்டில் வெளியான 'தனி ஒருவன்' படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டடிக்க ஆதியின் காட்டில் தற்போது அடைமழை பெய்து வருகிறது.

விளைவாக அரை டஜன் படங்கள் இவரின் கையில் உள்ளன. இந்நிலையில் ஆதி ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தை தயாரிக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் தான் ஹீரோவாக நடிப்பதையும், இந்த செய்திகளில் உண்மை இருப்பதையும் மறைமுகமாக ஆதி உறுதி செய்திருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கத்தில் கையில் விலங்குடன் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு 'விரைவில் ஏதாவது நடக்கலாம்' என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் ஆதியும் விரைவில் இணையவிருக்கிறார்.

Read more about: heros, hip hop tamizha
English summary
Sources Said Music Composer Adhi Turn to a Hero in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil