twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ganesh Chathurti: தமிழ் ஹீரோக்களுக்கு கைகொடுத்த பிள்ளையார்!

    |

    சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இடம்பெற்று ஹிட்டான சில விநாயகர் பாடல்களை காணலாம்.

    தமிழ் சினிமாவில் ஏராளமான பக்தி படங்கள் வெளியாகி மக்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. ஆனால் காதல், ஆக்ஷன், கமர்ஷியல் படங்களில் மிகக்குறைந்தளவு கடவுள்களை போற்றும் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

    அந்த மாதிரியான சில பாடல்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல்கள் எவை என்பது குறித்த தகவல்களை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த செய்தி தொகுப்பில் காண்போம்,

    சிந்து பைரவி

    சிந்து பைரவி

    சிந்து பைரவி படத்தில் இடம் பெற்றிருக்கும்
    மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீமகா கணபதி
    பாடலும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். கேஜே யேசுதாஸ் பாடியிருப்பார். சிவக்குமார் இந்த படத்தில் பாடகராக நடித்திருப்பார்.

    வான்மதி

    வான்மதி

    அஜித் நடிப்பில் வெளியான வான்மதி படத்திலும் பிள்ளையாரை பெருமைபடுத்தி ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும்.
    பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்ப்பா கணேசா
    நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா
    அவுட்டோரு ஆலமரம் ஆத்தோர அரசமரம்
    ஆல் ரவுண்டு நீ தானப்பா கணேசா
    என் கேர்ள் பிரண்ட் சேத்துவையு கணேசா
    தேவா இசையில் இடம் பெற்ற இந்த பாடலை அவரே பாடியிருப்பார்.

    உடன்பிறப்பு

    உடன்பிறப்பு

    உடன்பிறப்பு படத்திலல் இடம் பெற்றிருக்கும் சாமி வருது சாமி வருது பாடலும் பெரும் பிரபலமான பாடல். இன்றும் சாமி ஊர்வலம், விநாயகர் ஊர்வலம் என்றால் நிச்சயம் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.
    ஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா
    ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
    ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா
    கணபதி டிங் டிங் டிங் டிங்
    கணபதி டிங் டிங் டிங் டிங்..
    இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்பிரமணியம், மனோ ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். நடிகர்கள் சத்தியராஜ், ரஹ்மான் ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

    அமர்க்களம்

    அமர்க்களம்

    அமர்க்களம் படத்திலும் பிள்ளையாரை போற்றி இடம்பெற்ற காலம் கலிகாலம் பாடல் பெரும் வெற்றி பெற்றது.
    காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
    கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
    ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
    பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
    டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
    தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்..
    இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருப்பார். நடிகர் லாரன்ஸ் இந்த பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

    வேதாளம்

    வேதாளம்

    நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளாம் படத்தில் விநாயகரை போற்றி இடம் பெற்ற பாடல்,
    வீர விநாயகா வெற்றி விநாயகா
    சக்தி விநாயகா பேரழகா
    தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
    எத்திக்கும் தோன்றிட வேணுமையா..
    இந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா. இசையமைப்பாளர் அனிருத்தின் இசையிலும் குரலிலும் பெறும் வெற்றி பெற்றது இந்த பாடல்.

    English summary
    Hit Vinayagar songs in Tamil Movies. In Ajith's three films having Vinayagar song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X