twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2015... முதலுக்கு மோசமில்லாத பத்துப் படங்கள்!

    By Shankar
    |

    இந்த 2015-ம் ஆண்டு வெளியான படங்களில் படுதோல்வி அல்லது தோல்வியைத் தழுவிய படங்களைப் பார்த்தோம்.

    அடுத்து சுமாரான லாபம், அல்லது தாங்கக் கூடிய லேசான நஷ்டத்தைத் தந்த படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

    1.அனேகன்

    1.அனேகன்

    தனுஷ் - அமைரா தஸ்தூர் நடித்த இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கினார். பூர்வஜென்மம், பேன்டஸி எல்லாம் கலந்த கலவையாக வந்த இந்தப் படம், மாற்றானில் இழந்த பெயரை மீட்க கேவி ஆனந்துக்கு உதவியது. தயாரிப்பாளருக்கும் சுமாரான லாபம். பட்ஜெட்டில் மட்டும் கவனமாக இருந்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

    2. ஆம்பள

    2. ஆம்பள

    மினிமம் கியாரண்டி இயக்குநர் சுந்தர் சி இயக்கிய விஷால் படம். இந்தப் படம் இந்த ரேஞ்சுக்குத்தான் போகும் என தெரிந்தே எடுக்கப்பட்ட படம். கையைக் கடிக்கவில்லை.

    3. நண்பேன்டா

    3. நண்பேன்டா

    உதயநிதி - சந்தானம் - நயன்தாரா கூட்டணியில் வந்த படம். பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தப் படமும் ஓகே ஓகேவின் ஜெராக்ஸாக இருந்ததால், டைம் பாஸ் படமாக மாறிவிட்டது.

    4. இனிமே இப்படித்தான்

    4. இனிமே இப்படித்தான்

    சந்தானம் ஹீரோவாக நடித்த படம். பாக்யராஜின் சின்னவீட்டை அப்படியே நகலெடுத்திருந்தார்கள். சந்தானத்தின் காமெடி பெரிய ப்ளஸ். ஓரளவு நல்ல லாபமே கிடைத்தது வெளியிட்டவர்களுக்கு. சந்தானமும் இனிமே இந்த ரூட்டிலேயே போகலாம் என முடிவெடுக்க இந்தப் படம் முக்கிய காரணம்.

    5. 36 வயதினிலே

    5. 36 வயதினிலே

    ஜோதிகாவின் மறுபிரவேசப் படம் இந்த 36 வயதினிலே. மலையாளத்தில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யுவின் ரீமேக். பெண்கள் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மையமாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    6. ஈட்டி

    6. ஈட்டி

    அதர்வா - ஸ்ரீதிவ்யா நடித்த ஈட்டி இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி பெற்ற வெற்றி திரையுலகினருக்கு ஒரு இனிய அதிர்ச்சி.

    7. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

    7. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

    ராஜேஷ் எம் இயக்கிய இந்தப் படம் குடியை ஆதரிப்பதாக விமர்சனங்களில் திட்டித் தீர்த்தாலும், முதலுக்கு மோசமில்லை எனும் அளவுக்கு தப்பித்துவிட்டது.

    8. குற்றம் கடிதல்

    8. குற்றம் கடிதல்

    தேசிய விருது பெற்ற இந்த சின்ன பட்ஜெட் படம் வசூலிலும் ஓரளவு சாதித்தது.

    9. இசை

    9. இசை

    எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த சர்ச்சைப் படத்துக்கு நல்ல ஆரம்பம். படத்தின் கதைக்குக் கிடைத்த பப்ளிசிட்டி, வசூலுக்கு உதவியது. அடுத்து விஜய் படத்தை இயக்க வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

    இன்னும் இருக்கு

    இன்னும் இருக்கு

    இந்தப் பத்துப் படங்கள் தவிர, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், எனக்குள் ஒருவன், ராஜதந்திரம், ஓ காதல் கண்மணி, வை ராஜா வை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, டிமான்டி காலனி, இன்று நேற்று நாளை போன்ற படங்களும் ஓரளவு வசூலைப் பெற்று தயாரிப்பாளர்களைக் காப்பாற்றின.

    English summary
    Here are some Hit and above average films of Tamil cinema 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X