»   »  குழந்தைகள் ப்ளூ பிலிம் வழக்கில் சிக்கிய நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

குழந்தைகள் ப்ளூ பிலிம் வழக்கில் சிக்கிய நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
குழந்தைகளின் ப்ளூ பிலிம் வழக்கு.. தற்கொலை செய்துகொண்ட நடிகர்..

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் மார்க் சாலிங் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் மார்க் சாலிங். 35 வயதான அவர் க்ளீ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.

குழந்தைகள் ஆபாச பட வழக்கில் சிக்கியவர் மார்க்.

வழக்கு

வழக்கு

மார்க் சாலிங் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள்(child pornography) வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தீர்ப்பு

தீர்ப்பு

குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததை மார்க் சாலிங் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புக் கொண்டார். வரும் மார்ச் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தற்கொலை

தற்கொலை

மார்க் சாலிங்கை 4 முதல் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

விசாரணை

தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்பட இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் மார்க் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Hollywood actor Mark Salling(35) hanged himself to death at his apartment in Los Angeles on tuesday. He took this step weeks after pleading guilty to possessing child pornography.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil