»   »  நடிகை மர்ம மரணம்: அடித்துக் கொன்று அரைகுறையாக புதைத்த காதலர்?

நடிகை மர்ம மரணம்: அடித்துக் கொன்று அரைகுறையாக புதைத்த காதலர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை அதியா ஷபானி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாசிடோனியாவில் பிறந்து வளர்ந்தவர் அதியா ஷபானி(25). ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்து வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் பிப்ரவரி மாதம் தெரிவித்தனர்.

பிணம்

பிணம்

அதியா அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து 645 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் இடத்தில் அரைகுறையாக மூடப்பட்ட குழியில் பிணமாகக் கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை

கொலை

அதியாவின் உடம்பில் இருந்த டாட்டூக்களை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளனர். அதியாவை அவரது காதலரான கிறிஸ்டோபர் ஸ்பாட்ஸ் அடித்துக் கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகிறார்கள்.

கிறிஸ்டோபர்

கிறிஸ்டோபர்

அதியாவின் தலையில் படுகாயம் உள்ளது. போலீசார் கிறிஸ்டோபரை பிடித்து விசாரித்தபோது அதியாவும், தானும் காரில் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவரை பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

கார்

கார்

கிறிஸ்டோபர் போலீசாரிடம் இருந்து காரில் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை துரத்தவே கிறிஸ்டோபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

English summary
Hollywood actress Adea Shabani(25) was found dead 645 km away from her apartment in Los Angeles. Police believe that her boyfriend killed her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X