”பள்ளியில் படிக்கும் போது அறையில் பூட்டி வைத்து பாலியல் சீண்டல்”: பதறவைத்த பிரபல பாலிவுட் நடிகை
அமெரிக்கா: பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் நான் பள்ளியில் படிக்கும்போது பாலியல் துன்புறத்தல் செய்யப்பட்டேன் என மனம் திறந்துள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை, பாப் சிங்கர், மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் பாரிஸ் ஹில்டன்.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஹில்டன் ஓட்டல்கள் நிறுவனத்தின் நிறுவனர் கான்ராட் ஹில்டனின் பேத்திதான் இந்த பாரிஸ் ஹில்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு துயரம்
குழந்தைகள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இன்றல்ல நேற்றல்ல இது மனித இனம் தோன்றிய நாள் முதலே இருந்திருக்கும் என்பதே உண்மை. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களாலும், வீட்டில் நெருங்கிய உறவினர்களாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க முடியாமல் அந்தந்த நாட்டு அரசும், பல குழந்தைகள் நல அமைப்புகளும் திணறிதான் வருகின்றன. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனும் பாலியல் துன்புறுத்தலில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17வது வயதில் துன்புறுத்தல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பாரிஸ் ஹில்டன் பேட்டியளித்திருந்தார். அதில், தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "தனது 17வது வயதில் ப்ரோவா கேன்யன் என்ற பள்ளியில் தங்கி படித்து வந்தேன். அப்போது அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு என்னையும் எனது தோழிகளையும் தனியறைக்கு அழைத்து சென்ற இரண்டு ஆண்கள், மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் எங்கள் பிறப்புறுப்பில் விரல்களை நுழைப்பார்கள். ஆனால் அவர்கள் நிச்சயமாக மருத்துவர்கள் இல்லை" என்று பாரிஸ் ஹில்டன் கூறியுள்ளார்.

புரிந்துகொள்ள முடியவில்லை.
தொடர்ந்து பேசியுள்ள அவர், "அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அப்போது எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அது நிச்சயமாக பாலியல் கொடுமைதான். நான் ஒரு மேசையில் படுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என் கால்களை விரித்து மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டேன். அப்போது நான் அழுதேன், ஆனால், அவர்கள் வாயை மூடு. அமைதியாக இரு. என என்னை மிரட்டினார்கள். அந்தநேரம் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை" எனக் கூறியுள்ளார்.

பேசுவது தான் முக்கியம்
மேலும், "இந்த வலிமிகுந்த தருணங்களைப் பற்றி மனம் திறந்து பேசுவது முக்கியம், அதிலிருந்து நான் மீண்டுவந்து இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுவேன். நான் அனுபவித்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசுவதற்கு முன்பு இந்த காலம் எனது உண்மையை புதைத்துவிட்டது" எனக் கூறியுள்ளார். பாரிஸ் ஹில்டன் பேசியுள்ள இந்த சம்பவங்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் பாரிஸ் ஹில்டனுக்கு ஆதரவாகவும், இன்னும் பலர் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











