twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பிளாக் பாந்தர்' சட்விக் முதல், பர்ஸ்ட் பாண்ட் சீன் கானரி வரை.. 2020-ல் ஹாலிவுட் இழந்த பிரபலங்கள்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த வருடம் பல பிரபலங்களின் உயிர்களை, கருணையின்றி காவு வாங்கி இருக்கிறது காலம்.

    எப்படா இந்த வருஷம் முடியும் என்று சொல்கிற அளவுக்கு மக்கள் மனதில் கறையை ஏற்படுத்தி இருக்கிறது, 2020.

    பொங்கல் வெளியீடாக ரிலீசாகும் மாதவனின் மாறா.. ஆனால், தியேட்டரில் இல்லை அமேசான் பிரைமில்!பொங்கல் வெளியீடாக ரிலீசாகும் மாதவனின் மாறா.. ஆனால், தியேட்டரில் இல்லை அமேசான் பிரைமில்!

    அதற்கு கொரோனா என்கிற கண்ணுக்குத் தெரியாத உயிர்கொல்லி வைரஸ் காரணம்!

    சட்விக் போஸ்மேன்

    சட்விக் போஸ்மேன்

    இந்திய சினிமா பல திறமைகளை இந்த வருடம் இழந்ததுபோலவே ஹாலிவுட்டிலும் பல பிரபலங்கள் அநியாயமாக உயிரிழந்து இருக்கிறார்கள். மார்வெல் சூப்பர் ஹீரோ கேரக்டரான பிளாக் பாந்தர் ரோலில் நடித்த சட்விக் போஸ்மேன் (Chadwick Boseman)மரணம் நிச்சயம் அதிர்ச்சிதான். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட இவர், புற்றுநோய் காரணமாக 43 வயதில் மரணம் அடைந்தார், ஆகஸ்ட் 28 ஆம் தேதி.

    சீன் கானரி

    சீன் கானரி

    முதல், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த சீன் கானரி (Sean Connery) 90 வது வயதில் மரணம் அடைந்தார் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி! உலகளவில் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் கானரி. ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் வெளியான டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யன் வித் லவ், கோல்டு ஃபிங்கர், தண்டர் பால், யூ ஒன்லி லிவ் டுவைஸ், டைமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், நெவர் சே நெவர் அகைன் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்து பெரும் பிரபலமானவை. ஆஸ்கர் உட்பட பல முக்கிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

     ஒலிவியா டி ஹேவிலேண்ட்

    ஒலிவியா டி ஹேவிலேண்ட்

    கேப்டன் பிளட், த அட்வென்சர்ஸ் ஆப் ராபின் ஹுட் (1938), கான் வித் த விண்ட் (1939) உட்பட சுமார் 49 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மூத்த நடிகை, ஒலிவியா டி ஹேவிலேண்ட் (Olivia de Havilland). 1946 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் வெளியான டு ஈச் ஹிஸ் ஓன் மற்றும் த ஹேர்ரஸ் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். கொரோனாவால் இவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

    நயா ரிவேரா

    நயா ரிவேரா

    தற்கொலையா, தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது மர்மமாகவே இருக்கிறது, ஹாலிவுட் நடிகை நயா ரிவேராவின் (Naya Rivera) மரணம். இவர், த மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், ஃபிரான்கன்ஹூட், க்ளீ, அட் த டெவில் டோர், மேட் ஃபேமிலிஸ் உட்பட பல படங்களில் நடித்திருக்கும் இவர், லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். தனது 4 வயது மகனுடன் பிக்னிக் சென்றவர், ஜூலை 8 ஆம் தேதி மகனை மட்டும் படகில் விட்டுவிட்டு மாயமானார். சில நாட்களுக்குப் பிறகு அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    இயர்ல் கேமரான்

    இயர்ல் கேமரான்

    பிரிட்டீஷ் படங்களில், முதன்முதலாக நடித்த கருப்பின நடிகர்களுள் ஒருவர் இயர்ல் கேமரான் (Earl Cameron). 1951 ஆம் ஆண்டு பூல் ஆஃப் லண்டன் (Pool of London) என்ற படத்தில் நடித்தார். ஹீரோவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் கருப்பினத்தவர் ஒருவர் நடித்த பிரிட்டீஷ் படம் இது. தொடர்ந்து சிம்பா, த ஹார்ட் வித்தின், டார்ஜான் த் மேக்னிபிசியன்ட், கியூபா, த இன்டர்பிரிடர், த குயின் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நான்காவது ஜேம்ஸ்பான்ட் படமான 'தண்டர்பாலி'ல் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

    இயான் ஹோல்ம்

    இயான் ஹோல்ம்

    ஜீசஸ் ஆப் நாசரேத், ஏலியன்ஸ், ரிட்டர் ஆப் த சோல்ஜர், ஹாம்லெட், த லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஏவியேட்டர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இயான் ஹோல்ம் (Ian Holm) ஜூன் மாதம் மறைந்தார். நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இயான் ஹோல்ம், சாரியாட்ஸ் ஆஃப் பயர் படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் படங்களில் இருந்து சின்ன படங்கள் வரை நடித்துள்ள இவர், கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான த ஹோபிட்: த பேட்டல் ஆஃப் த ஃபைவ் ஆர்மிஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

    டேவிட் பிரவுஸ்

    டேவிட் பிரவுஸ்

    பிரபல ஸ்டார் வார்ஸ் பட நடிகர் டேவ் ப்ரவுஸ் (David Prowse) தனது 85 வயதில் கடந்த நவம்பர் மாதம் காலமானார். டாக்டர் ஹூ, பிளாக் ஸ்நேக் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த டேவ் ப்ரவுஸ், பளு தூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். கடைசியாக, 2015 ஆம் ஆண்டு ஐயம் யுவர் ஃபாதர் என்ற படத்தில் நடித்த அவர், நீண்ட நாள் நண்பருக்காக ஷீல்ட்ஸ் என்ற இசை ஆல்பத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

    English summary
    Hollywood celebrities deaths in 2020
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X