twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்காரங்க என் கதையைச் சுட்டுட்டாங்க - ஒரு உதவி இயக்குநரின் அடேங்கப்பா கம்ப்ளெயின்ட்!

    By Shankar
    |

    பொதுவாக எந்த தமிழ் சினிமாவைப் பார்த்தாலும் அது ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி அல்லது கொரிய-ஈரானிய-ஸ்பானிஷ் படங்களின் சுட்ட காப்பி என்று துவைத்து தொங்கப் போடுவது சமீபத்திய ட்ரெண்ட்.

    ஆனால் முதல் முறையாக, தன் கதையை காப்பியடித்து ஒரு மெகா பட்ஜெட் ஹாலிவுட் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு தமிழ் சினிமா உதவி இயக்குநர் புகார் கூறியுள்ளார்.

    அது மட்டுமல்ல, இது தொடர்பாக காப்புரிமைச் சங்கம், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என சட்ட ரீதியான போருக்கும் அவர் தயாராகி வருகிறார்.

    அவர் பெயர் பரஞ்சோதி. தேவகோட்டையைச் சேர்ந்த 35 வயது உதவி இயக்குநர். தெனாவட்டு என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், சில குறும்படங்களையும் எடுத்துள்ளார்.

    இவர் தன் கதையைக் காப்பியடித்து எடுத்ததாகக் குற்றம்சாட்டும் ஹாலிவுட் படம் கிரேவிட்டி. 80 மில்லியன் டாலர் செலவில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் விரைவில் வெளியாகப் போகிறது.

    2007-ல் இந்தக் கதையை ஆஸ்திரேலியாவில் ஹாலிவுட் படங்களை விநியோகிக்கும் பீட்டர் ஆல்வின் என்பவரிடம் சென்னையில் வைத்துச் சொன்னாராம். இதற்கு இங்குள்ள ஒரு நண்பர் உதவி செய்தாராம்.

    பரஞ்சோதி சொன்ன கதை ரொம்பப் பிடித்துப் போனதால், முழு ஸ்கிரிப்டையும் கொடுக்குமாறு கேட்டாராம் பீட்டர் ஆல்வின். அவரிடம் முழு ஸ்ரிப்டையும் கொடுக்கும்போதே, எச்சரிக்கையாக இந்திய காப்புரிமை அமைப்பிடமும், மேற்கு அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்டிலும் பதிவு செய்துள்ளார் பரஞ்சோதி.

    Hollywood lifted my script, alleges little-known TN director

    இப்போது கிரேவிட்டி படத்தின் கதையும் தன் கதையும் ஒரே மாதிரியானவை என்பது தெரிய வந்ததும் தன் நண்பர் மூலம் பீட்டர் ஆல்வினைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் நண்பர் இவரது போனை எடுக்காமல் தவிர்த்தாராம். பேஸ்புக்கிலும் இவரை ப்ளாக் செய்து விட்டாராம்.

    பீட்டர் ஆல்வின் இவரது தொடர்பு எல்லைக்கு உள்ளேயே வரவில்லையாம். எனவேதான் நீதிமன்றக் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார் பரஞ்சோதி.

    சரி.. என்னதான் கதை?

    60000 உயரத்தில் பறக்கும் ஒரு செயற்கைக் கோளுக்கு உதவ வரும் ஒரு போயிங் 777 விமானம் சிக்கலுக்குள்ளாகிறது. அதை மையப்படுத்தி பரஞ்சோதி ஸ்க்ரிப்ட் செய்துள்ளார்.

    கிரேவிட்டி கதையில், போயிங் விமானமில்லை... மாறாக அது செயற்கைக் கோள் என மாற்றப்பட்டுள்ளதாம். மற்றபடி சீன் பை சீன் அது என் கதைதான் என்கிறார் பரஞ்சோதி.

    English summary
    At a time when critics have made a habit of pointing out how Indian movies tend to be poor imitations of Hollywood flicks, here comes a little-known, struggling filmmaker from Tamil Nadu, who claims that a Hollywood flick Gravity made with a budget of $80 million, and on the verge of release, was lifted from a script authored by him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X