»   »  ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறக்கும் ஷங்கர்... ரஜினி-அக்ஷய் சண்டைக்காக

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறக்கும் ஷங்கர்... ரஜினி-அக்ஷய் சண்டைக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் படத்தின் 2 வது பாகமாக உருவாகி வரும் 2.0 படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் சென்னை வந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பல முன்னணிக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றி வரும் படம் 2.0.


இப்படத்தில் ரஜினி நாயகனாக நடிக்க அவருக்கு வில்லனாக பாலிவுட் நாயகன் அக்ஷய்குமார் நடித்து வருகிறார்.


2.0

2.0

ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தை சுமார் 350 கோடிகளுக்கும் அதிகமான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.


டிரான்ஸ்பார்மர்ஸ்

டிரான்ஸ்பார்மர்ஸ்

இப்படத்தின் சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்ட ஷங்கர் அதற்காக, 'டைஹார்ட்' மற்றும் 'டிரான்ஸ்பார்மர்ஸ்' படங்களில் பணியாற்றிய கென்னி பேட்ஸை ஏற்கனவே வரவழைத்திருந்தார்.


டார்க் நைட்

டார்க் நைட்

இந்நிலையில் தற்போது 'டார்க் நைட்' மற்றும் 'பேட் மேன் Vs சூப்பர் மேன்' படங்களில் பணியாற்றிய ஆரோன் கிரிப்பையும் ஷங்கர் வரவழைத்திருக்கிறார். கென்னி பேட்ஸ் மற்றும் ஆரோன் கிரிப் இருவரும் தற்போது ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.


ஸ்டண்ட் சில்வா

ஸ்டண்ட் சில்வா

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் கோலிவுட் சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா மற்றும் அவரது உதவியாளர்கள் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.


இந்தியளவில்

இந்தியளவில்

2.0 படம் முழுவதுமே 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இந்திய அளவில் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Hollywood Stunt Masters Kenny Bates and Aaron Crippen now Joins 2.0 Sets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil