அடுத்த மிரட்டலுக்கு தயாரான Hombale ஃபிலிம்ஸ்...டைரக்டர் யார் தெரியுமா ?

சென்னை : தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனமான Hombale ஃபிலிம்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அடுத்த படத்தின் டைரக்டர் யார், எப்படிப்பட்ட கதை என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான Hombale ஃபிலிம்ஸ், 2012 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2012 ம் ஆண்டு இந்நிறுவனம் துவங்கப்பட்டிருந்தாலும் 2014 ம் ஆண்டு முதல் தான் இந்நிறுவனம் பட தயாரிப்பை துவங்கியது.

6 மாஸ் ஹிட் படங்கள்

6 மாஸ் ஹிட் படங்கள்

Hombale ஃபிலிம்ஸ் தனது முதல் தயாரிப்பாக மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த Ninnindale என்ற படத்தை தயாரித்தது. உலக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் கேஜிஎஃப் இரண்டு பாகங்களை தயாரித்தது இந்த நிறுவனம் தான். கடந்த 8 ஆண்டுகளில் 6 படங்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் இவை அனைத்துமே மாஸ் ஹிட் படங்கள்.

வழக்கத்தை மாற்றிய நிறுவனம்

வழக்கத்தை மாற்றிய நிறுவனம்

Hombale ஃபிலிம்ஸ் இதுவரை தயாரித்த 6 படங்களில் 3 புனித் ராஜ்குமார் நடித்தது. 3 படங்கள் யாஷ் நடித்தது. சமீபத்தில் இந்த வழக்கத்தை மாற்றி, ரிஷாப் ஷெட்டி நடிக்கும் கன்டாரா, ஜெகதீஷ் நடிக்கும் ராகவேந்திரா ஸ்டோரிஸ், பிரபாஸ் நடிக்கும் சாலர், ராஷித் ஷெட்டி நடிக்கும் ரிச்சர்ட் ஆன்டனி போன்ற படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது.

கேஜிஎஃப் நிறுவனத்தின் அடுத்த படம்

கேஜிஎஃப் நிறுவனத்தின் அடுத்த படம்

தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், தங்களின் 11 வது படைப்பாக அடுத்து தயாரிக்க போகும் படத்தின் அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தை டைரக்டர் சுதா கொங்கரா இயக்க போவதாகவும், இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

டைரக்டர் இவர் தானா

டைரக்டர் இவர் தானா

அதே சமயம் படத்தின் ஹீரோ யார், அது எந்த மொழி படம் என எந்த அறிவிப்பையும் Hombale ஃபிலிம்ஸ் வெளியிடவில்லை. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று, பாவக் கதைகள் படங்களை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சுதா கொங்கரா, அடுத்து யாரை இயக்க போகிறார் என அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். சூர்யா, அஜித் என பல ஹீரோக்களை சுதா கொங்கரா இயக்க போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், Hombale ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க போவது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X