twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலுக்கும் எதிர்ப்பு: பெங்களூரில் சன்னி லியோன் நைட்ஸ் ரத்து

    By Siva
    |

    Recommended Video

    பெங்களூரு வரும் சன்னி லியோனுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு- வீடியோ

    பெங்களூர்: கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து பெங்களூர் மான்யதா பார்க்கில் நடக்கவிருந்த சன்னி லியோன் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    புத்தாண்டையொட்டி பெங்களூர் மான்யதா பார்க்கில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆபாச நடிகையான சன்னி வந்து புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கன்னட கலாச்சாரம் பாதிக்கும் என்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

    Home minister orders Bangalore police to cancel Sunny nights

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சன்னி லியோனின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர். எங்களை மீறி நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்தனர்.

    போராட்டம் வலுத்துள்ளதையடுத்து சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் சன்னி லியோன் புத்தாண்டு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்காது.

    English summary
    Karnataka home minister has ordered Bangalore police not to allow Sunny Leone nights to be held in Manyata park on New Year's eve as pro- Kannada groups are protesting against her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X